புத்தாண்டு பலன்கள் 2025 - உங்கள் ராசிக்கு வேலை, பணிச்சூழல் எப்படி?

By Guest Author

மேஷம்: உங்களை குறை கூறிய மேலதிகாரி மாற்றப்படுவார். உங்கள் மேல் சுமத்தப்பட்ட பொய் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். கணினி துறையினரே! இதைவிட வேறு நல்ல வேலைக்குப் போகலாம் என்றிருந்தாலும், சரியான வாய்ப்பில்லாமல் தவித்த நிலை மாறும். இப்போது கூடுதல் சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். | முழுமையாக வாசிக்க > மேஷம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - உழைப்பு, தன்னம்பிக்கை..!

ரிஷபம்: கிடைக்க வேண்டிய பதவியுயர்வு இனி கிடைக்கும். ஊதியமும் உயரும். அலுவலகப் பிரச்சினைகள் மட்டுமல்லாது அதிகாரியின் சொந்த பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பீர்கள். பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். பணிகளையும் திறம்பட முடித்து அனைவரையும் வியக்க வைப்பீர்கள். புது வேலை கிடைக்கும். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவர். கணினி துறையினரே! அந்நிய நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் புது வாய்ப்பு கிட்டும். | முழுமையாக வாசிக்க > ரிஷபம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - செல்வாக்கு, சுறுசுறுப்பு..!

மிதுனம்: உயர் அதிகாரிகளின் அன்பைப் பெறுவீர். சக ஊழியர்களால் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட அவல நிலை மாறும். எதிர்பார்த்த பதவியுயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இப்போது கிட்டும். கணினி துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். | முழுமையாக வாசிக்க > மிதுனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - பலம், பலவீனம்..!

கடகம்: உங்களை வெறுத்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். அவ்வப்போது மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க நேரிடும். சக ஊழியர்களில் சிலர் உங்களைப் பற்றி மேலதிகாரியிடம் குறை கூறுவார்கள். அலுவலகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் எச்சரிக்கையுடன் இருங்கள். கணினி துறையினரே! தற்சமயம் நீங்கள் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து தலைமை அலுவலத்துக்கு மாற்றப்படுவீர்கள். சம்பளம் உயரும். | முழுமையாக வாசிக்க > கடகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - படிப்பினை, நெளிவு சுளிவு..!

சிம்மம்: மேலதிகாரியால் அவ்வப்போது மன உளைச்சல் வந்தாலும், உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அலுவலக சூட்சுமங்கள் அத்துப்படியாகும். காலம் தாழ்த்தாமல் பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விருப்பமற்ற இடமாற்றம் உண்டு. வருட பிற்பகுதியில் பதவி உயரும். |முழுமையாக வாசிக்க > சிம்மம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - தனித்திரு, விழித்திரு..!

கன்னி: அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கப்போய் சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும். என்ன தான் இரவு பகலாக உழைத்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்துவீர்கள். விருப்பமில்லாத இடமாற்றம் உண்டு. மேலதிகாரியுடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் இருந்தாலும் அனுசரித்துப் போவது நல்லது. |முழுமையாக வாசிக்க > கன்னி ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - விஸ்வரூப வெற்றி..!

துலாம்: பணிகளை முடிப்பதி லிருந்த தேக்கநிலை மாறும். மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வருட தொடக்கத்திலேயே பதவியுயர்வு, சம்பள உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கணினி துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். பணிச்சுமை அதிகரிக்கும். |முழுமையாக வாசிக்க > துலாம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - ஏற்றம், உயர்வு..!

விருச்சிகம்: வருட முற்பகுதியில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றங் களும் வரும். மேலதிகாரியின் தவறுகளை மேலிடத்துக்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். சக ஊழியர்கள் உங்களை உரசிப் பார்ப்பார்கள். பிற்பகுதியில் மன நிம்மதியுண்டு. சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். கணினி துறையினரே! புதிய வாய்ப்புகள் வந்தால் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. |முழுமையாக வாசிக்க > விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - திட்டங்களில் வெற்றி..!

தனுசு: இழுபறியாக இருந்த பதவியுயர்வு இப்போது கிடைக்கும். மேலதிகாரி உங்களிடம் சில நேரங்களில் கோபப்பட்டாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த பனிப்போர் நீங்கும். கேட்ட இடத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வருவீர்கள். வேறு சில வாய்ப்புகளும் வரும். மறுக்கப்பட்ட உரிமைகளை பெற சிலர் நீதிமன்றம் செல்ல வேண்டி வரும். கணினித் துறையினரே! அயல்நாட்டு தொடர்புடைய புதிய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். சலுகைகள் அதிகரிக்கும். | முழுமையாக வாசிக்க > தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - செல்வாக்கு, பதவி..!

மகரம்: இதுவரை வீண் பழியால் மன உளைச்சலுக்குள்ளாகி தூக்கமிழந்து தவித்தீர்கள். மற்றவர்களின் வேலைகளை சேர்த்து பார்த்தும் நல்ல பெயர் கிடைக்காமல் இருந்தது. இனி அந்த அவலநிலை மாறும். நெடுநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவியுயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். கேட்ட இடத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வருவீர்கள். உங்களின் தனித்திறமையை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். மூத்த அதிகாரியிடமிருந்து அலுவலக ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். அவர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுடன் நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். |முழுமையாக வாசிக்க > மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மாற்றுப்பாதை, வெற்றி..!

கும்பம்: கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். புது வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. இடமாற்றம் இருக்கும். | முழுமையாக வாசிக்க > கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - தெளிவு, நிஜம்..!

மீனம்: எல்லா வேலை களையும் இழுத்துப் போட்டு பார்த்தும் உங்களை குறை சொல்லுவதற்கென்றே ஒரு கூட்டம் இதுவரை இருந்தது. இனி அந்த நிலை மாறும். உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். பழைய பிரச்சினைகளை கிளறிவிட்டு சிலர் வேடிக்கை பார்த்தார்கள் என்பதை அறிந்து அதற்கு முடிவு கட்டுவீர்கள். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தருவதாக இருக்கும். | முழுமையாக வாசிக்க > மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - வேகம், புதிய முயற்சி..!

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

21 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்