புத்தாண்டு பலன்கள் 2025 - உங்கள் ராசிக்கு தொழில், வியாபாரம் எப்படி?

By Guest Author

மேஷம்: இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் இருந்த நிலை மாறும். இனி தொலைநோக்குச் சிந்தனையுடன் முதலீடு செய்து லாபம் பார்ப்பீர்கள். கடையை வேறிடத்துக்கு மாற்றுவீர்கள். வேலையாட்களை நம்பி தொழில் ரகசியங்களை சொல்லிக் கொடுக் கவும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். பர்னீச்சர், ஹோட்டல், லாட்ஜ், ஏற்றுமதி -இறக்குமதி, நீசப் பொருட்களால் ஆதாயமடை வீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் | முழுமையாக வாசிக்க > மேஷம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - உழைப்பு, தன்னம்பிக்கை..!

ரிஷபம்: பெரிய அளவில் முதலீடுகள் செய்து திணறாமல் அளவாக பணம் போடுங்கள். சந்தை நிலவரம் அறிந்து புது கொள்முதல் செய்யுங்கள். புதிய பிரமுகர்கள் அறிமுகமாவர். கடையை விரிவுபடுத்தி அழகுபடுத்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் சென்று உங்களை டென்ஷனாக்குவதுடன், விவாதமும் செய்வார்கள். மருந்து, எண்டர்பிரைசஸ், துணி வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் கருத்துவேறுபாட்டால் பிரிவார்கள். புதிய பங்குதாரர்கள் வருவார்கள் | முழுமையாக வாசிக்க > ரிஷபம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - செல்வாக்கு, சுறுசுறுப்பு..!

மிதுனம்: இனி புதுப் புது திட்டங்களால் போட்டி யாளர்களை திணறடிப்பீர்கள். தேங்கிக்கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வாடிக்கையாளர் களை கவர சலுகை திட்டங்களை அறிவிப்பீர்கள். கொடுக்கல்-வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் இணைவார்கள் | முழுமையாக வாசிக்க > மிதுனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - பலம், பலவீனம்..!

கடகம்: இதுவரை கடையை விரிவுபடுத்தி, பெரிய முதலீடுகளை போட்டு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம். இனி வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். நீண்ட நாளாக நினைத்திருந்த மாற்றங்களை உடனே செய்வீர்கள். வானொலி விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மற்றவர்களின் ஆலோசனையை ஒதுக்கித் தள்ளுங்கள். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்துங்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். மெடிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள் | முழுமையாக வாசிக்க > கடகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - படிப்பினை, நெளிவு சுளிவு..!

சிம்மம்: பக்கத்துக் கடைக்காரரைப் பார்த்து பெரிய முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கை யாளர்களை அதிகப்படுத்த லாபத்தை குறைத்து விற்பனை செய்ய வேண்டி வரும். வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். பெரிய தொகையை யாருக்கும் கடனாக தர வேண்டாம். கணிசமாக லாபம் உயரும். உணவு, புரோக்கரேஜ், கமிஷன், எலக்ட்ரிக்கல் வகை களால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் மோதல்கள் ஏற்படும். | முழுமையாக வாசிக்க > சிம்மம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - தனித்திரு, விழித்திரு..!

கன்னி: அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கை யாளர்களை அதிகப்படுத்த சலுகை திட்டங்களை அறிவிப்பீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்களை சேர்ப்பீர்கள். நன்கு அறிமுகமானவர்களானாலும் கடன் தரவேண்டாம். புரோக்கரேஜ், ஏஜென்ஸி வகைகளால் ஆதாயம் உண்டு. உணவு, இரும்பு, கட்டிட பொருட்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள் | முழுமையாக வாசிக்க > கன்னி ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - விஸ்வரூப வெற்றி..!

துலாம்: உங்களுக்கு பின்னால் தொழில் தொடங்கியவர்களுடன் போட்டி போட்டு முன்னேறுவீர்கள். வட்டிக்கு வாங்கி கடையை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபமீட்டுவீர்கள். திடீர் லாபம், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடிவரும். மருந்து, உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது பிரச்சினை செய்த நிலை மாறும். இனி பணிந்து போவார்கள் | முழுமையாக வாசிக்க > துலாம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - ஏற்றம், உயர்வு..!

விருச்சிகம்: பழைய வாடிக்கை யாளர்களை ஈர்க்க புது திட்டங்களை செயல்படுத்துவீர்கள். மற்றவர்கள் சொல்கிறார்கள் என நினைத்து பெரிய முதலீடுகளை போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். தொல்லை கொடுத்த வேலையாட்களை மாற்றிவிட்டு அனுபவமிகுந்தவர்களை பணியில் அமர்த்துவீர்கள். ஸ்டேஷனரி, பப்ளிகேஷன், உணவு, எலக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். சங்கத்தின் சார்பில் கௌரவப் பதவிகள் தேடி வரும். உங்களிடமிருந்து பிரிந்து சென்ற அனுபவமிக்க வேலையாட்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். கூட்டுத் தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள் | முழுமையாக வாசிக்க > விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - திட்டங்களில் வெற்றி..!

தனுசு வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்த பிட் நோட்டீஸ், வானொலி விளம்பரம் என செலவிடுவீர்கள். பக்கத்து கடைக்காரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். வேலையாட்களின் தொந்தரவு குறையும். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். பங்குதாரர்களின் துரோகங்களை மறந்து பழைய நிலைக்கு திரும்புவீர்கள். பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும் | முழுமையாக வாசிக்க > தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - செல்வாக்கு, பதவி..!

மகரம்: இதுவரை பக்கத்து கடைக் காரருடன் தகராறு, சரக்குகள் தேங்கியதால் நஷ்டம் என தொடர் சிக்கல்கள் இருந்த நிலை மாறும். பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். டெக்ஸ்டைல், மருந்து, உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் கொட்டம் அடங்கும். உங்களின் ஆலோசனைக்கு தலையசைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கூடி வரும். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்துக்கு கடையை மாற்றும் முயற்சியில் இறங்கலாம் | முழுமையாக வாசிக்க > மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மாற்றுப்பாதை, வெற்றி..!

கும்பம்: பொறுப்பாக செயல்பட்டு லாபத்தை பெருக்கப் பாருங்கள். பக்கத்துக் கடைக்காரரை பார்த்து பெரிய முதலீடுகளைப் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். பங்குதாரர்களால் விரயம் வரும். ரியல் எஸ்டேட், கமிஷன், அரிசி - எண்ணெய் மண்டி மூலம் லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக, பல யுக்திகளைக் கையாள்வீர்கள் | முழுமையாக வாசிக்க > கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - தெளிவு, நிஜம்..!

மீனம் சரக்குகளை நிரப்பி வைத்தும் வாங்குவார் யாருமில்லை என்ற நிலை மாறும். இனி சந்தை நிலவரங்களை விரல்நுனியில் வைத்துக் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வீர்கள். பர்னீச்சர், மருந்து, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. அரசு கெடுபிடியெல்லாம் தளரும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த புது சலுகைகளை அறிவிப்பீர்கள். வேலையாட்கள் மற்றும் கூட்டுத்தொழிலில் பங்கு தாரர்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது குடைச்சல் தந்த நிலை மாறும். இனி அவர்கள் உங்களிடம் பணிந்து போவார்கள். பழைய பங்குதாரர்களும் தேடி வருவார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். கணினி துறையினரே! வேலையில் திருப்தியில்லாமல் போகும். அயல்நாட்டு வாய்ப்புகள் வந்தால் யோசித்து ஏற்பது நல்லது | முழுமையாக வாசிக்க > மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - வேகம், புதிய முயற்சி..!

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்