2025 புத்தாண்டு பொதுப் பலன்கள் - ஒரு பார்வை

By Guest Author

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீப்லவ வருஷம் - தக்‌ஷிணாயம் - ஹேமந்த ரிது - மார்கழி மாதம் 16-ம் நாள் பின்னிரவு 17-ம் நாள் முன்னிரவு அன்றைய தினம் தினசுத்தி அறிவது சுக்லபக்‌ஷ பிரதமை - செவ்வாய்க்கிழமை பின்னிரவு புதன்கிழமை முன்னிரவு - பூராடம் நட்சத்திரம் - சித்தயோகம் - கன்னியா லக்னம் - தனுர் சந்திரா லக்னம் - ரிஷப நவாம்சம் - விருச்சிக சந்திர நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2025-ஆம் ஆண்டு பிறக்கிறது.

ராசிநிலை - பாதசார விபரம் - லக்னம் - ஹஸ்தம் 2ம் பாதம் - சந்திரன் சாரம் | சூரியன் - பூராடம் 1ம் பாதம் - சுக்கிரன் சாரம் | சந்திரன் - பூராடம் 4ம் பாதம் - சுக்கிரன் சாரம் | செவ்வாய் (வ) - பூசம் 1ம் பாதம் - சனி சாரம் | புதன் - கேட்டை 4ம் பாதம் - புதன் சாரம் | குரு (வ) - ரோகினி 3ம் பாதம் - சந்திரன் சாரம் | சுக்கிரன் - அவிட்டம் 4ம் பாதம் - செவ்வாய் சாரம் | சனி - சதயம் 2ம் பாதம் - ராகு சாரம் | ராகு - உத்திரட்டாதி 1ம் பாதம் - சனி சாரம் | கேது - உத்திரம் 3ம் பாதம் - சூரியன் சாரம்

செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற எண் 2025: இந்த வருடத்தின் கூட்டு எண்: 2 + 0 + 2 + 5 = 9. ஒன்பது என்பது செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற எண். முருகனுக்கும் மஹாவிஷ்ணுவிற்கும் உகந்த எண் ஒன்பதாகும். ஆண்டு பிறக்கும் நேரத்தில் லக்னாதிபதி புதன் தைரிய ஸ்தானத்தில் சுயசாரம் பெற்று அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதியை குரு பார்க்கிறார். குருவின் சஞ்சாரத்தால் கன்னியர்களுக்கு தகுந்த மணமாகும். மாலை வாய்ப்புகளும் - மழலை பாக்யமும் - வேலைவாய்ப்புகளும் வியக்கும் விதத்தில் இருக்கும். பத்திரிகைத் துறை - எழுத்துத் துறை - ஆசிரியர் பணி - கணிதம் - ரசாயணம் - ஆன்மிகம் - சோதிடம் - வழக்கறிஞர் துறை - புத்தகத் துறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

சுக்கிரன் தனது சஞ்சாரத்தை யோக ஸ்தானத்தில் இருப்பதால் கலைத்துறை செழிக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் கலைஞர்கள் கவுரவப்படுத்தப்படுவர். வண்ணத்திரை, சின்னத்திரை இரண்டுமே மக்களுக்கு பயனளிக்கும். உணவிற்கு எந்த விதமான பங்கமும் இராது. உணவு உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை நிர்ணயமாகும். மக்களுக்கு பொருளாதார நிலை உயரும். பெட்ரோல் - டீசல் - கச்சா எண்ணை - சமையல் எண்ணை விலை உயரும்.

புத்தாண்டு பிறக்கும் போது உள்ள புதனின் இருப்பால் இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் - வெள்ளி விலையும் அதிகரிக்கும். நிறைய சிவாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும். மழை பொழிவு நன்றாக இருக்கும். சராசரி அளவை விட இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும்.

அண்டார்டிகா - அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் - சுமத்ரா தீவு - ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது. யாராலும் சரியான முறையில் வானிலையை கணித்து கூற முடியாத நிலை ஏற்படலாம். அணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராக பேசும் நபர்கள் அதிகமாவார்கள்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

17 hours ago

ஜோதிடம்

18 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்