குருப் பெயர்ச்சி: மிதுனம் ராசியினருக்கு எப்படி? - 01.05.2024 முதல் 13.04.2025 வரை

By செய்திப்பிரிவு

மனித நேயத்தின் மறுஉருவ மாய் விளங்குபவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து பணவரவையும், செல்வாக்கையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அள்ளிக் கொடுத்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை ராசிக்கு 12-வது வீட்டில் நுழைக்கிறார். 12-ல் குரு நுழைவதால் பயணங்கள் அதிகமாகும்.

செலவுகளும் கூடிக் கொண்டே போகும். திட்டமிட்ட காரியங்கள் தள்ளிப் போய் முடியும். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவீர்கள். முன்கோபத்தையும் கொஞ்சம் கட்டுப்படுத்துவது நல்லது. கணவரை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டாம். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக இருந்தால் நல்லது என்று ஆதங்கப்படுவீர்கள். மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களால் தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும்.

நெருங்கிய உறவினர், தோழிகளின் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சி களை முன்னின்று நடத்துவீர்கள். குரு 4-ம் வீட்டை பார்ப்பதால் வாகனம் வாங்குவீர்கள். சிலர் புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். குரு 6-ம் வீட்டை பார்ப்பதால் நோய் குறையும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றி வெற்றி பெறுவீர்கள்.

குரு 8-வது வீட்டை பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிநாட்டில், வெளிமாநிலங்களில் இருப்பவர்களுடன் சேர்ந்து புது தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டு பிரிவார்கள்.

தன்னம்பிக்கை குறைந்தாலும் ஜெயித்து காட்டுவீர்கள். தாய்வழி சொத்துகளில் சிக்கல்கள் வரக்கூடும். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். எந்த சொத்து வாங்கினாலும் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது. வீடு மாற வேண்டிய சூழல் உருவாகும். சிலர் இருக்கும் ஊரிலிருந்து, மாநிலத்திலிருந்து வேறு ஊர், மாநிலம் செல்ல வேண்டிய அமைப்பு உண்டாகும்.

மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.. சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். புதிய வீடு வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர பயணம்: 1.5.2024 முதல் 13.6.2024 வரை உங்கள் தைரிய ஸ்தானாதிபதி சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் அதிரடி முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதரருக்கு திருமணம் கூடி வரும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகள் விருப்பப்பட்ட கல்வி நிறுவனத்தில் அவர்களை சேர்ப்பீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்கள் உதவுவார்கள்.

13.6.2024 முதல் 19.8.2024 வரை மற்றும் 28.11.2024 முதல் 10.4.2025 வரை உங்களின் தனாதிபதி சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். இங்கிதமாகவும், எதார்த்தமாகவும் பேசி பல விஷயங்களை சாமர்த்தியமாக முடிப்பீர்கள். திருமணம் கூடி வரும். குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் அமைதியுண்டாகும்.

20.8.2024 முதல் 27.11.2024 வரை மற்றும் 10.4.2025 முதல் 13.4.2025 வரை உங்கள் சஷ்டம, லாபாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் சகோதர வகையிலும், வீடு சொத்து பராமரிப்பு வகையிலும் செலவுகள் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் வந்து போகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். புறநகர் பகுதியில் வீட்டு மனை அமையும்.

வியாபாரத்தில் லாபம் குறையாது. ஆனால் வேலைச்சுமை அதிகமாகும். ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். மூத்த அதிகாரிகள் உங்களின் கடின உழைப்பை புரிந்துக் கொள்வார்கள். இந்த குரு மாற்றம் அவ்வப்போது செலவுகளையும், பயணங்களையும் தந்தாலும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரக் கூடியதாக இருக்கும்.

பரிகாரம்: சென்னை - பாடி - திருவலிதாயத்தில் உள்ள சிவாலயத்தில் வீராசன கோலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிகளுக்கு உதவுங்கள். அதிர்ஷ்டம் பெருகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்