மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 - குரோதி வருடம் எப்படி?

By Guest Author

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடையும் மகர ராசி அன்பர்களே! இந்த வருடம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து வந்த இழுபறி நீங்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். எந்த ஒரு சூழ்நிலையிலும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம். சிக்கல்கள் எதுவும் உருவானால் அந்தத் துறை சார்ந்த வல்லுனர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. சில நேரங்களில் தேவையில்லாத எண்ணங்கள் ஏற்படலாம் வீண் கோபம் படபடப்பு ஏற்படலாம் அந்த நேரத்தில் பொறுமையை கையாள்வது அவசியம்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராகும் மருத்துவ செலவினங்கள் குறையும். பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம்.

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. அரசியல்துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூரத் தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. சிறு சிறு விஷயங்களில் கூட வாக்குவாதம் ஏற்படலாம் அந்த சமயத்தில் வார்த்தைகளில் கவனம் மிக மிக அவசியம்.

மாணவர்களுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கல்வி சம்பந்தமான விஷயங்களில் இதுவரை இருந்து வந்த தொய்வுநிலை மாறும் ஒரே நேரத்தில் பல விதமான கல்வியை கற்றுக் கொள்ளக்கூடிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் சில பேருக்கு வந்து சேரும்

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சினைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும்.

திருவோணம்: இந்த வருடம் யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.

அவிட்டம் 1,2 பாதங்கள்: இந்த வருடம் தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

பரிகாரம்: விநாயகருக்கு சனிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி | அதிர்ஷ்ட ஹோரைகள்: சனி - சுக்ரன் - புதன் | எண்கள்: 6, 7, 9

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) எடுத்த காரியங்களில் வெற்றி பெற துடிக்கும் கும்ப ராசி அன்பர்களே! இந்த வருடம் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மனச்சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.

தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. தொழில் சம்பந்தமாக வெளியூர் வெளிநாடு பிரயாணங்கள் ஏற்படலாம். ஏற்கனவே இருந்த தொழில் சிக்கல்கள் அகலும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். நல்ல பணியாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அரசாங்க உத்தியோகம் செய்பவர்களுக்கு இந்த வருடம் மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய வேலையை விட்டுவிட்டு புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். உறவினர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். பெண்களுக்கு யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக நடைபெறும். எந்த ஒரு ரகசியங்களையும் காப்பாற்றுவது உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.

கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு சககலைஞர்கள் பொறாமை கொள்வார்கள். கடன் பிரச்சினை தீரும். செல்வநிலை உயரும். இறுக்கமான சூழ்நிலை மாறும். புதிய சொத்துக்கள் வந்து சேரும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. எடுத்துக் கொண்ட காரியங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை. அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு அதிகமான முயற்சி என்பது அவசியம்

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வருடம் தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேலதிகாரிகள் திருப்தியடைவார்கள். மனதில் இருந்த கவலை நீங்கும்.

சதயம்: இந்த வருடம் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வருடம் பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர எதிர்ப்புகள் அகலும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி | அதிர்ஷ்ட ஹோரைகள்: சனி - புதன் - சுக்கிரன் | எண்கள்: 5, 6

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) எதிலும் முன்னெச்சரிக்கையோடு செயல்படும் மீன ராசி அன்பர்களே! இந்த வருடம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். பொறுமையை கையாள்வது அவசியம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதப்போக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம். நேரத்தை மிகச் சரியான முறையில் கையாண்டு எடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் செய்து முடிக்கவும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். பெண்களுக்கு உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. குடும்பாதிபதி உச்சமாக இருப்பதால் குடும்பத்தில் பிரச்சினைகள் அகலும்.

கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சினை தீரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். நீண்ட காலத்திற்கு பிறகு எதிர்பார்க்கக்கூடிய பதவி உயர்வு உங்களுக்கு வந்து சேரும் கட்சியின் மேல்மட்டத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும்

மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும். கல்வியில் அளப்பரிய அற்புதமான சாதனைகளை நிகழ்ச்சிகள்

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வருடம் பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது.

உத்திரட்டாதி: இந்த வருடம் மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும் பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ரேவதி: இந்த வருடம் மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன்கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் நலம் சீராகும். பொருளாதார சூழ்நிலை நன்றாக இருக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி | அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு - சந்திரன் - செவ்வாய் | எண்கள்: 1, 5, 7

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்