சிம்மம்: நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுவதில் வல்லவர்கள். எங்கும் எதிலும் முதலிடம் பிடிக்க எண்ணும் நீங்கள், யாருக்காகவும் எதற்காகவும் உங்களின் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்.
உங்கள் ராசிக்கு புதனும், சுக்ரனும் சாதகமான வீட்டில் நின்றுகொண்டிருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் நண்பர்களின் உதவி கிடைக்கும். காற்றோட்டம், தண்ணீர் வசதி அதிகமுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேற்று இனத்தவர்களின் ஆதரவு கிட்டும். குலதெய்வ கோயிலை புதுப்பிப்பீர்கள்.
உங்கள் ராசியிலேயே இந்தாண்டு பிறப்பதால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அடுக்கடுக்காக செலவுகள் இருக்கும் என்றாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். மெடிக்ளைம் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
உங்கள் ராசியை குருபகவான் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். குடும்பம் இன்ப மயமாகும். புகழ், கவுரவம் கூடும். வேலை கிடைக்கும். சொந்த - பந்தம் மதிக்கும்படி பெரிய பதவிகளும் தேடி வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். வெளிநாட்டு பயணம் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். அக்கம் - பக்கம் வீட்டாருடன் இருந்த மோதல் நீங்கும். மனைவி பிள்ளைகளுடன் பேசி மகிழவும் நேரம் ஒதுக்குவீர்கள்.
30.4.2024 வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு நிற்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். வங்கியில் வாங்கியிருந்த கடனை அடைப்பீர்கள். ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கோயில் கும்பாபிஷேக திருப்பணி கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, கிரஹப்பிரவேசம் என பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும்.
1.5.2024 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குருபகவான் தொடர்வதால் எதிலும் அலட்சியமாக இல்லாமல் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். அடுத்தவர்களை தாக்கிப் பேச வேண்டாம். முக்கிய வேலைகளை பிறரை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். பிள்ளைகளின் நட்பு வட்டங்களை கண்காணியுங்கள்.
ஆண்டு முழுவதும் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் வந்தமர்கிறார். கேது பகவான் 2-வது வீட்டில் வந்தமர்கிறார். தந்தையார் ஸ்தானத்தை விட்டு ராகு விலகுவதால் அவருடன் இருந்த மனக்கசப்புகள் விலகும். கேதுவால் வாக்குவாதங்கள் இருக்கும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். கூடுதலாக சில மொழிகளை கற்றுக் கொள்வீர்கள். பொது அறிவுத் திறன் வளரும். இளைய சகோதரர் உங்களை மதிப்பார்.
இந்த ஆண்டு முழுவதும் 7-ம் வீட்டில் சனிபகவான் தொடர்வதால் கணவன் - மனைவிக்குள் குழப் பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். எச்சரிக்கையாக இருக்கவும். உடம்பில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து குறையும்.
வியாபாரிகளே! தேங்கிக்கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர சலுகை திட்டங்களை அறிவிப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். மே மாதத்தில் வியாபாரத்தை விரிவுப்படுத்த புதிய தொடர்புகள் கிடைக்கும். அதிரடி லாபங்களும் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
உத்தியோகஸ்தர்களே! பதவி உயர்வு கிடைக்கும். எல்லோரும் மதிப்பார்கள். மேலதிகாரியின் ஒத்துழைப்பு இனி கிடைக்கும். காலம் தாழ்த்தாமல் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். முக்கிய பதிவேடுகளை கவனமாக கையாளுங்கள்.
இந்த புத்தாண்டு கட்டுக்கடங்காத செலவுகளை தந்து, கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளினாலும், மற்றொரு பக்கம் மகிழ்ச்சியையும், வெற்றியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் பத்ரகாளியை சென்று வணங்குங்கள். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago