‘திடீர் வளர்ச்சி’ - மேஷம் ராசியினருக்கான 2024 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

By Guest Author

மேஷம்: வாக்குறுதி என்பது சத்தியத்துக்கும் மேலானது, என்பதை உணர்ந்த நீங்கள் சொன்ன சொல் தவறமாட்டீர்கள். இனிய வார்த்தைகள் இரும்புக் கதவையும் திறந்துவிடும் என்பதை புரிந்த நீங்கள் சுவையான பேச்சில் சொக்க வைப்பீர்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் நேரத்தில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமாகப் பேசி பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். பொது விழாக்கள், கல்யாண, கிரஹப்பிரவேச சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். புதன் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் நண்பர்கள், உறவினர்கள் மத்தி யில் செல்வாக்கு கூடும்.

வருடம் பிறப்பு முதல் 30.4.2024 வரை குருபகவான் உங்கள் ராசியில் ஜென்ம குருவாக நீடிப்பதால் அடுக்கடுக்காக வேலையிருந்துக் கொண்டேயிருக்கும். வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். வீட்டிலும், வெளியிலும் சிலர் உங்களை புறக்கணிப்பது போலத் தோன்றும்.

அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சிறுசிறு அவமானங்கள் நெருங்கிய நட்புவட்டாரத்தில் வரக்கூடும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம்.

குருபகவான் 1.5.2024 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டில் அமர்வதால் சோர்வு, களைப்பு நீங்கும். உங்கள் கோபம் குறையும். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு நீங்கி அமைதி திரும்பும். ஈகோ பிரச்சினையால் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். தள்ளிப் போன கல்யாணம், சீமந்தம் நல்ல விதத்தில் முடியும்.

வங்கிக் கடன் கிடைத்து புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். உங்கள் மகளுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து வரன் அமையும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். அநாவசிய செலவுகள் இனி குறையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.

அதிக சம்பளம், சலுகையோடு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

இந்த ஆண்டு முழுவதும் ராகு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் மறைமுக ஆதாயம் உண்டாகும். மின்சார, சமையலறை சாதனங்கள் பழுதாகும். திடீர் பயணங்களும், அலைச்சல்களும் அதிகரிக்கும். இக்காலகட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். வழக்கில் அலட்சியம் காட்டாதீர்கள்.

கேது பகவான் வருடம் முடியும் வரை 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிப் பெறுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். எல்லா வசதிகளும் நிறைந்த வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.

வியாபாரிகளே! புதிதாக தொழில் தொடங்கும் ஆசையில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். ஜனவரி, பிப்ரவரி, நவம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபமும் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களே! மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பதவி உயர்வு உண்டு.

இந்த புத்தாண்டு திடீர் வளர்ச்சியையும், பிள்ளைகளால் நிம்மதியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: மதுரை மாவட்டத்தில் அருள்பாலிக்கும் மீனாட்சி அம்மனை சென்று வணங்குங்கள். சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவுங்கள். கடன் பிரச்சினை தீரும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 mins ago

ஜோதிடம்

26 mins ago

ஜோதிடம்

57 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்