ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - கும்பம் ராசியினருக்கு எப்படி?

By Guest Author

கும்பம் கிரகநிலை - ராகு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்துக்கு மாறுகிறார். கேது பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்துக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த ராகு கேது பெயர்ச்சியில் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும்.

புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.பெண்களுக்கு அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கை கூடி வரும். அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி வரும். உடன் பணிபுரியும் பணியாளர்களால் நன்மை ஏற்படும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மேலிடத்தின் மூலம் உங்கள் காரியங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது. உடல்நலனைப் பொறுத்தமட்டில் ஜலதோஷ தொந்தரவு ஏற்படலாம். தலையில் நீ கோர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும்.

அவிட்டம்: இந்த பெயர்ச்சியினால் தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.

சதயம்: இந்த பெயர்ச்சியால் வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை. எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மனதில் இருந்த கவலை நீங்கும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம். தொழில் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும்.

பூரட்டாதி: இந்த பெயர்ச்சியால் கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேலதிகாரிகள் திருப்தியடைவார்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. இருந்த பிரச்சினை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.

(2023 அக்.8-ம் தேதி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீனத்துக்கும், கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் மாறி 2025 ஏப்.26-ம் தேதி வரை அங்கு இருக்கிறார்கள். அதாவது, கும்பத்துக்கு ராகு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்துக்கு மாறுகிறார். கேது பகவான் தொழில ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்துக்கு மாறுகிறார்.)

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

20 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்