மிதுனம் கிரகநிலை - ராகு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்துக்கு மாறுகிறார். கேது பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்துக்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த ராகு கேது பெயர்ச்சியால் தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் வரலாம். உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும். உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகளை அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம்.
பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.
» ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு வஸ்திரம் அணிவிப்பு
» மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அக்., 15ல் நவராத்திரி விழா தொடக்கம்
அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள். உடல்நலனைப் பொறுத்தவரை ரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். நடைப்பயிற்சி செய்வது நன்மையைத் தரும்.
மிருகசீரிஷம்: இந்த பெயர்ச்சியில் குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக தொழிலாளிகளுடன் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.
திருவாதிரை: இந்த பெயர்ச்சியால் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
புனர்பூசம்: இந்த பெயர்ச்சியால் வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும்.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.
(2023 அக்.8-ம் தேதி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீனத்துக்கும், கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் மாறி 2025 ஏப்.26-ம் தேதி வரை அங்கு இருக்கிறார்கள். அதாவது மிதுன ராசிக்கு ராகு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்துக்கு மாறுகிறார். கேது பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்துக்கு மாறுகிறார்.)
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago