மேஷம் ராசியினருக்கான ஏப்ரல் மாத பலன்கள் - முழுமையாக | 2023

By Guest Author

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் ராகு, சுக்ரன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி - விரைய ஸ்தானத்தில் குரு, சூர்யன் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

கிரகமாற்றங்கள்: 07-04-2023 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14-04-2023 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: செவ்வாயை ராசிநாதனாக கொண்ட மேஷராசியினரே... நீங்கள் பயமின்றி பேசக்கூடியவர். இந்த மாதம் துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஏற்ற தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடல் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு செயலாற்றுவது வளர்ச்சிக்கு உதவும். வாடிக்கையாளர்களிடம் சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் தன்மையாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம் குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சினைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகளுக்காக செய்யும் வேலைகளில் தடை ஏற்படலாம்.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.

கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். மாணவர்கள் எதிர்கால கல்வி தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், மற்றவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.

அஸ்வினி: இந்த மாதம் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.

பரணி: இந்த மாதம் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவைத் தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

பரிகாரம்: முருகனுக்கு பால் பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனகவலை நீங்கும் | சந்திராஷ்டம தினங்கள்: 9, 10, 11 | அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 4, 30

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்