மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சூரியன், சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றம்: 04-02-2023 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-02-2023 அன்று சூரிய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 16-02-2023 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 21-02-2023 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: திட்டமிட்டு காரியங்களை செய்து வெற்றி காணும் மகர ராசியினரே... நீங்கள் தயக்க குணத்தை விடுவது வெற்றிக்கு உதவும். இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்களது செயல்களுக்கு ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கிடைக்கும்.
அரசியல் துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். லாபத்தையும் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.
பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
உத்திராடம்: இந்த மாதம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய மாதம். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்து சேர்வார்கள். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும்.
திருவோணம்: இந்த மாதம் ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும்.
அவிட்டம்: இந்த மாதம் திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள்.
பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும் | சந்திராஷ்டம தினங்கள்: 6, 7 | அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27
மற்ற ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பிப்ரவரி மாத பலன்கள் 2023: மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனசு | மகரம் | கும்பம் | மீனம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago