சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) - கிரக நிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி(வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், குரு - பாக்கிய ஸ்தானத்தில் புதன், ராகு, சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகநிலை உள்ளது. கிரக மாற்றங்கள்: 06-06-2022 அன்று பகல் 01:59 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 18-06-2022 அன்று மாலை 05:55 மணிக்கு சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-06-2022 அன்று இரவு 12:24 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-06-2022 அன்று விடியற்காலை 05:32 மணிக்கு செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
சமூகத்தில் மிக முக்கிய மனிதர்களின் தொடர்புகளினால் ஆதாயங்களை அள்ளும் சிம்ம ராசி அன்பர்களே!
இந்த மாதம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைப்பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளைச் செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்கக் கூடும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதைக் கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலைத் தரும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமுகமாக நடந்து முடியும்.
பெண்களுக்குத் தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சின்னச் சின்ன செலவுகளைச் சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாகக் கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.
அரசியல் துறையினருக்கு அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.
மகம்:
இந்த மாதம் நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்படச் செய்வீர்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள்.
பூரம்:
இந்த மாதம் கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரத்து கூடும். மனக் குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். திறமையாகச் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். சின்ன விஷயத்துக்குக் கூட கோபம் வரலாம். நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும்.
உத்திரம்:
இந்த மாதம் புத்தி சாதுர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது போலவே மற்றவர்கள் நடந்து கொள்ளவில்லையே என்று டென்ஷன் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும்.
பரிகாரம்: பிரதோஷ வேளையில் சிவனையும் நந்தீஸ்வரரையும் வணங்க எல்லாப் பிரச்சினைகளும் சுமுகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: சந்திரன், சுக்கிரன்; தேய்பிறை: சந்திரன், சுக்கிரன்
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 21, 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 15, 16
------------------------------------------
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago