- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) - கிரகநிலை:ராசியில் புதன், ராகு, சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு என கிரக நிலை உள்ளது. கிரக மாற்றங்கள்: 06-06-2022 அன்று பகல் 01:59 மணிக்கு புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 18-06-2022 அன்று மாலை 05:55 மணிக்கு சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 25-06-2022 அன்று இரவு 12:24 மணிக்கு புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 27-06-2022 அன்று விடியற்காலை 05:32 மணிக்கு செவ்வாய் பகவான் அயன சயன் போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்:
ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மேஷ ராசி அன்பர்களே!
நீங்கள் பூமிகாரகனான செவ்வாயை ராசிநாதனாகக் கொண்டவர்கள் இந்த மாதம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவம் சார்ந்த செலவுகள் குறையும். அடுத்தவர்களுக்கு உதவும் முன் யோசித்து செயல்படுங்கள். மூன்றாம் மனிதர்களின் தலையீட்டால் பிரச்சினைகள் சுமுகமாக முடியும்.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் நீங்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதிதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிட்டும். மேலதிகாரிகளிடத்தில் உங்கள் மீதான நல்ல எண்ணங்கள் மேலோங்கும். பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம்.
குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது வார்த்தைகளை கவனமாகப் பேசுவது முக்கியம்.
பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சினை உண்டாகலாம். கவனம் தேவை.
அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும்.
கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுக வாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.
அஸ்வினி:
இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்கத் தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
பரணி:
இந்த மாதம் வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது.
கார்த்திகை:
இந்த மாதம் குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்கவழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.
பரிகாரம்: துர்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமையில் பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனத் துயரம் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 6, 7
----------------------------------------
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago