- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) - கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - லாப ஸ்தானத்தில் ராகு, சூர்யன், சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன் (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றம்: மே 04 - அன்று புதபகவான் வக்ர நிலைமையில் மேஷ ராசிக்கு மாறுகிறார். மே 15 - அன்று சூர்ய பகவான் ரிஷப ராசிக்கு மாறுகிறார். மே 17 - செவ்வாய் பகவான் மீன ராசிக்கு மாறுகிறார். மே 24 - சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள் :
எதையும் ஆராய்ந்து பார்த்து அதில் இருக்கும் சாதகபாதகங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படும் மிதுன ராசியினரே! இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும்.
தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரத்து கிடைக்கப் பெறுவார் கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.
குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அடையும் சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.
மிருகசீரிஷம்:
இந்த மாதம் சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். மேல அதிகாரிகளிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும்.
திருவாதிரை:
இந்த மாதம் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரித்து மிளிரும்.
புனர்பூசம்:
இந்த மாதம் சிறப்பான முன்னேற்றம் உண்டு. இசைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்கும் வெளிநாட்டிற்கும் செல்ல வேண்டி வரும். உங்களது உடைமைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ளவும். பணம் மற்றும் புதிய நண்பர்கள் சேர்க்கை கிடைக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட எல்லா பிரச்சினைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.
சந்திராஷ்டம தினங்கள்: மே 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: மே 05, 06
********************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago