ரிஷப ராசி அன்பர்களே! மே மாத பலன்கள்

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) - கிரகநிலை: ராசியில் புதன் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சூர்யன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரக மாற்றம்: மே 04 - அன்று புதபகவான் வக்ர நிலைமையில் மேஷ ராசிக்கு மாறுகிறார். மே 15 - அன்று சூர்ய பகவான் ரிஷப ராசிக்கு மாறுகிறார். மே 17 - செவ்வாய் பகவான் மீன ராசிக்கு மாறுகிறார். மே 24 - சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள் :
எந்தஒரு காரியத்திலும் அனுபவ அறிவைக் கொண்டு திறம்பட செயலாற்றும் ரிஷப ராசியினரே! இந்த மாதம் பண வரத்து திருப்தி தரும். ஆனால் உங்களுக்கு நன்மை செய்கிறேன் என்று கூறிக் கொண்டு உங்களைச் சுற்றி வருபவர்களால் செலவு உண்டாகும், கவனம் தேவை. திடீர் கோபம் ஏற்பட்டு அதனால் அடுத்தவர்களிடம் சண்டை உண்டாக நேரலாம். எனவே மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. வீண் பேச்சைக் குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங் களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களது செய்கை கள் உங்களது கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். நிதானத்தை கடைப்பிடிப்பது வீண் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கைத் துணை ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
பெண்களுக்கு வீண்பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியைத் தரும். மற்றவர்களுக்காக எந்த உத்தரவாதமும் தராமல் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசிப் பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.


கார்த்திகை:
இந்த மாதம் புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும் சிறந்த காலமாகும். பிறருடைய மனம் நோகும்படி வார்த்தைகளை வாங்கும் சூழல் உருவாகும். பொழுதுபோக்கான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள்.

ரோகிணி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். நம்பிக்கை உகந்தவர்களாக பழகுவார்கள். வரவுக்குத் தகுந்த செலவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வரி செலுத்துவதில் முறைகளைப் பின்பற்றுங்கள். வேலையாட்கள் சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். வேலை பார்த்துக் கொண்டே உபதொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: பவுர்ணமியில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்சினை தீரும்.
சந்திராஷ்டம தினங்கள்: மே 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: மே 02, 03, 04, 30, 31
*****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்