கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், குரு, சுக்ரன், சனி - ராசியில் சூர்யன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரக மாற்றங்கள்: 03-04-2022 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
06-04-2022 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-04-2022 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-04-2022 அன்று புதன் பகவான் தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-04-2022 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
எதையும் ஆராய்ந்து பார்ப்பதில் வல்லவரான கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.
உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமுகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
» மகர ராசி அன்பர்களே! ஏப்ரல் மாத பலன்கள் - வேலையில் இடமாற்றம்; பயணத்தால் வெற்றி; பண வரவு திருப்தி!
» தனுசு ராசி அன்பர்களே! ஏப்ரல் மாத பலன்கள் - வேலையில் தாமதம்; அந்தஸ்து உயரும்; குழப்பம் தீரும்!
பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல்திறன் கூடும்.
மாணவர்களுக்கு பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.
கலைஞர்கள் உற்சாகமுடன் செயல்பட்டு கொடுத்த வாக்கினை காப்பாற்றி விடுவீர்கள். பண வரவு தாராளமாக இருக்கும். தேவையான பட வாய்ப்புகள் வரும்.
அரசியலில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். குறிப்பிட்ட சிலர் உங்களுக்காக பேசுவார்கள். நற்காரியங்களில் ஈடுபட்டு பேரும் புகழும் கிடைக்கப் பெறுவீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது.
சதயம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும்.
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9
***************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago