மிதுன ராசி அன்பர்களே! பிப்ரவரி மாத பலன்கள் ; கவனம் தேவை; வீண் வாக்குவாதம் வேண்டாம்; நிதானம் தேவை! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)


கிரக நிலை:
ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் செவ், புதன், சுக் (வ) - அஷ்டம ஸ்தானத்தில் சூர், சந், சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.


கிரக மாற்றங்கள்:
09-02-2022 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-02-2022 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:


எந்த ஒரு சிறிய விஷயத்தையும் கவனமாக கிரகித்துக் கொள்ளும் தன்மை உடைய மிதுன ராசி அன்பர்களே!


இந்த மாதம் எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.


புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகள் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளிப் போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.


குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாகப் பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும். வாகனத்தை ஓட்டும்போது கவனம் தேவை.


அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும்.


கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் மாதமிது. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.


பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் எந்த விஷயத்தை சொல்லும்போதும் கவனம் தேவை.
மாணவர்கள் பாடங்களை படிக்கும்போது மனதை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.


மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பெண்களுக்கு பணவரத்து இருக்கும். அரசியல்துறையினர் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். எந்தக் காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் திட்டமிடாவிட்டால் காரியத் தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும்போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும்.


திருவாதிரை:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின்போது உடைமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். தாயாரின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களைச் செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையைச் செய்வதாக இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: புதன் கிழமைகளில் நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும். பொருளாதாரம் உயரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20
~~~~~~~~~~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்