- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் புதன், சுக்(வ), சனி - விரய ஸ்தானத்தில் குரு என கிரக நிலை இருக்கிறது.
» கும்ப ராசி அன்பர்களே! ஜனவரி 2022 பலன்கள்; வீண் அலைச்சல்; வேலைப்பளு கூடும்; வாக்குவாதம் வேண்டாம்!
» மகர ராசி அன்பர்களே! ஜனவரி 2022 பலன்கள்;திறமை வெளிப்படும்; பண வரவு; ஆடம்பரச் செலவு வேண்டாம்!
பலன்கள்:
மீன ராசியினரே! நீங்கள் மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் உதவிகள் செய்பவர்கள். இந்த மாதம் ராசிநாதன் குரு மறைந்திருந்தாலும் மற்ற கிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு அனுகூலமாக இருக்கிறது. மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். சுக்கிரன் சஞ்சாரம் வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெற்றுத் தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும்.
தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.
பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாகப் பேசி மற்றவர்களிடம் அனுசரித்துச் செல்வது காரிய வெற்றிக்கு உதவும்.
கலைத்துறையினருக்கு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களைச் செய்யுங்கள்.
அரசியல்துறையினருக்கு மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும்.
பூரட்டாதி:
இந்த மாதம் வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மேலிடத்திடம் இருந்து பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர் மத்தியில் மதிப்பு கூடும்.
உத்திரட்டாதி:
இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் பெறும். வீண் அலைச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் நிர்ப்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் மனஸ்தாபங்கள் உண்டாகும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.
ரேவதி:
இந்த மாதம் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மை தரும். நல்ல விஷயங்கள் நிகழும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் தொல்லை ஒழியும். தம்பதிகளிடையே அன்பு மலரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை சேர்ப்பீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடி வரும். மனப்பிரச்சினைகள் விலகும்.
பரிகாரம்: தினமும் வீட்டில் பஞ்சமுக தீபம் ஏற்றி சிவனாரையும் அம்பாளையும் தரிசித்து வர மன அமைதி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19, 20
*********
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
25 mins ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago