- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், சுக்(வ), சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரக நிலை இருக்கிறது.
» சிம்ம ராசி அன்பர்களே! ஜனவரி 2022 பலன்கள்; உடல் சோர்வு; மன அமைதி; செலவுகள் கூடும்!
» கடக ராசி அன்பர்களே! பிடிவாதம் வேண்டாம்; எதையும் சமாளிப்பீர்கள்; நிதானம் தேவை! ஜனவரி 2022 பலன்கள்
பலன்கள்:
கன்னி ராசியினரே! நீங்கள் உழைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த மாதம் பொறுப்புகள் அதிகரிக்கும். சூரியன் சஞ்சாரத்தால் வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம். கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். தொழில் வியாபாரத்திற்கு புதிதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதேநேரத்தில் வாக்குவாதமும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும். அவர்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.
பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு ராசிநாதன் புதனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும்.
அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும்.
மாணவர்களுக்கு நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய பாடங்களை அன்றைய தினமே படித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.
உத்திரம்:
இந்த மாதம் வேலை இல்லாமல் காத்திருந்தவர்களுக்கு சரியான வேலை அமையும். புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு சிறப்புடன் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும்.
ஹஸ்தம்:
இந்த மாதம் மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். பணத்தை இழக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது. உயர்பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிலை வந்து சேரும். உடனிருப்பவர்களால் உங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகலாம்.
சித்திரை:
இந்த மாதம் வம்பு தும்புகள் வந்து சேரலாம். வீணான கோபமும் ஆத்திரமும் கொள்ள வேண்டாம். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் சுமாராக இருக்கும். வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்புகள் கை கூடி வரும். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.
பரிகாரம்: பெருமாளை வணங்கிவர வாழ்வு வளம் பெறும். மாணவர்களுக்கு தேர்வு பயம் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31
**************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago