சிம்ம ராசி அன்பர்களே! ஜனவரி 2022 பலன்கள்; உடல் சோர்வு; மன அமைதி; செலவுகள் கூடும்! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)


கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்(வ), சனி - சப்தம ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரக நிலை இருக்கிறது.


பலன்கள்:


சிம்ம ராசியினரே! நீங்கள் தோரணையில் அனைத்து காரியங்களையும் சாதிக்கும் வல்லமை உடையவர்கள். இந்த மாதம் தடைப்பட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நல்லது. சுக்கிரன் சஞ்சாரம் ஆடம்பரச் செலவுகளை ஏற்படுத்தும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயண சுகம் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகும். தேவையான பணஉதவி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும்.

பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாகப் பேசுவது பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும்.
கலைத்துறையினர் விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.

அரசியல்துறையினருக்கு புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனம் தேவை.

மகம்:

இந்த மாதம் உங்களின் குழந்தைகளால் உங்களுக்குப் பெருமை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர் விவகாரங்களில் கவனம் தேவை. ஆர்டர்கள் கிடைப்பது திட்டமிட்டபடி இல்லாமல் தாமதமாகும். வேலையாட்களிடம் கவனமாக இருப்பது நல்லது. நல்ல முன்னேற்றம் காணலாம். வீண் அலைச்சல் மற்றும் வீண் விரயம் இனி ஏற்படாது.


பூரம்:
இந்த மாதம் நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரியம் ஒன்று நடக்கும். எதிலும் திட்டமிடல் அவசியம். பலன்கள் சற்று தாமதமாகி கிடைக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளில் வீண் தலையீடு வேண்டாம். நண்பர்களாக இருப்பவர்கள் கூட விரோதிகளாக மாறும் காலகட்டம் என்பதால் கவனம் தேவை.

உத்திரம்:
இந்த மாதம் கூட்டுத்தொழில் புரிபவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள் உயர்வு, மேல் அதிகாரிகளின் அனுசரனையும் கிடைக்கும். தனியார் ஊழியர்களுக்கு நல்ல நிலைமை வந்து சேரும்.


பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். நன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

17 mins ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

6 days ago

மேலும்