மகர ராசி அன்பர்களே! நவம்பர் மாத பலன்கள்; ஆரோக்கியத்தில் கவனம்; காரியத்தில் தாமதம்; லாபம் உண்டு; அனுமன் வழிபாடு! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


கிரகநிலை:


ராசியில் குரு, சனி - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரக நிலவரம் உள்ளது.


கிரக மாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:


பகையை மனதில் வைத்து எதிரியை தகுந்த நேரம் பார்த்து வெற்றி கொள்வதில் சாமர்த்தியம் மிகுந்த மகர ராசியினரே!

இந்த மாதம் மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். சூரியன் சஞ்சாரம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செவ்வாய் சஞ்சாரத்தால் கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம்.

தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது.

பெண்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும்.
கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை.
அரசியல்துறையினருக்கு பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.

உத்திராடம்:


இந்த மாதம் குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். செயல்திறன் அதிகரிக்கும். சில நேரங்களில் உங்கள் வார்த்தைகளால் பிரச்சினை வரலாம்.


திருவோணம்:


இந்த மாதம் எந்த சூழ்நிலையிலும் பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாருக்காவது ஏதேனும் வாக்குறுதிகள் கொடுத்திருந்தால் அவற்றை உடனடியாக நிறைவேற்றுங்கள். திருமணத்திற்கு நல்ல வரனாக அமையும். தொழில் வியாபாரம் சுறுசுறுப்படையும்.


அவிட்டம்:
இந்த மாதம் உங்கள் வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். முதலீடு செய்வதற்குண்டான பணவசதி வந்து சேரும். கடன் தொல்லை கொஞ்சம்கொஞ்சமாக குறையும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் பங்காளிகளிடம் பரிவுடன் நடந்து கொள்ளவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெற்றிலை மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21
**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்