மிதுன  ராசி அன்பர்களே! நவம்பர் மாத பலன்கள்; விருப்பம் நிறைவேறும்; வீண் பகை; எதிலும் வெற்றி; புதிய நண்பர்கள்! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)


கிரக நிலை:


பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - ரண் ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.


கிரக மாற்றம்:
13-11-2021 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று சூர்ய பகவான், புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:


காரியம் சாதிக்க பலவகையான யோசனைகளையும் தந்திரங்களையும் கையாள்வதில் கெட்டிக்காரர்களான மிதுன ராசியினரே!

இந்த மாதம் காரிய அனுகூலம் ஏற்படும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும்போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
பெண்களுக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.

கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு மன திருப்தியைத் தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.

அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.

மிருகசீரிஷம்:


இந்த மாதம் சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். மேல அதிகாரிகளிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும்.


திருவாதிரை:


இந்த மாதம் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரித்து மிளிரும்.


புனர்பூசம்:
இந்த மாதம் சிறப்பான முன்னேற்றம் உண்டு. இசைத் துறைகளைச் சார்ந்தவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்கும் வெளிநாட்டிற்கும் செல்ல வேண்டி வரும். உங்களது உடமைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ளவும். பணம் மற்றும் புதிய நண்பர்கள் சேர்க்கை கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 10, 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 mins ago

ஜோதிடம்

35 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்