- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
கிரகநிலை:
ராசியில் சூர்யன், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரக மாற்றங்கள்:
05-08-2021 அன்று புதன் பகவான் ராசியிலிருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
12-08-2021 அன்று சுக்கிர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-08-2021 அன்று சூரிய பகவான் ராசியிலிருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23-08-2021 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்:
இந்த மாதம் எல்லாக் காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தைக் குறைத்துப் பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.
பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும்.
அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழகுவது அவசியம்.
கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.
புனர்பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாகத் தெரிந்து கொண்டு பாடங்களைப் படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும்போது கவனம் தேவை.
பூசம்:
இந்த மாதம் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். பணிநிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிக்கோளற்ற வீண் பயணங்கள் அதனால் அலைச்சல் என ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிட்டு அதைத் தீர்த்து வைக்க முயல்வதை தவிர்ப்பது நல்லது.
ஆயில்யம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வீண் அலைச்சல், பண வரத்தில் தாமதம் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்கும். அலுவலகம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டிவரும். எந்திரங்களைக் கையாளும்போது கவனம் தேவை.
பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை சமர்ப்பித்து வணங்குங்கள். பிரச்சினைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17
************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago