துலாம் ராசி அன்பர்களே! தொழிலில் லாபம்; வீண் அலைச்சல்; குடும்பத்தில் ஒற்றுமை;  ஜூன் மாத பலன்கள்

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் - உத்தராயனம் - வஸந்த ரிது - வைகாசி மாதம் 17ம் தேதி பின்னிரவு 18ம் தேதி முன்னிரவு - அன்றைய தினசுத்தி அறிவது க்ருஷ்ணபக்ஷ சஷ்டி - அவிட்டம் நட்சத்திரம் - மாஹேந்திர நாமயோகம் - கரஜி கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 12.00 மணிக்கு கும்ப லக்னத்தில் ஜூன் மாதம் பிறக்கிறது.

ஜூன் மாதம் பிறக்கும் போது இருக்கும் கிரகநிலை:


லக்னம் - அவிட்டம் 4ம் பாதம் - செவ்வாய் சாரம்
சூர்யன் - ரோகிணி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
சந்திரன் - அவிட்டம் 2ம் பாதம் - செவ்வாய் சாரம்
செவ்வாய் - புனர்பூசம் 3ம் பாதம் - குரு சாரம்
புதன்(வ) - ரோகிணி 1ம் பாதம் - சந்திரன் சாரம்
குரு(அசா) - சதயம் 1ம் பாதம் - ராகு சாரம்
சுக்கிரன் - ம்ருகசீர்ஷம் 3ம் பாதம் - செவ்வாய் சாரம்
சனி (வ) - திருவோணம் 1ம் பாதம் - சந்திரன் சாரம்
ராகு - ரோகிணி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
கேது - அனுஷம் 4ம் பாதம் - சனி சாரம்


************************

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

கிரகநிலை:

தனவாக்கு ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சனி(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(அசா) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ), ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் என கிரக நிலை அமைந்திருக்கிறது.
இம்மாதம் 03ம் தேதி - வியாழக்கிழமை அன்று செவ்வாய் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 10ம் தேதி - வியாழக்கிழமை அன்று புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 15ம் தேதி - செவ்வாய்கிழமை அன்று சூர்யன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 23ம் தேதி - புதன்கிழமை அன்று சுக்கிரன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :

இந்த மாதம் எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்ள நேரலாம், கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். பார்ட்னர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசல்கள் மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தைச் சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக இருப்பதும் அன்பாகப் பேசுவதும் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம்தேவை.

கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்துச் செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.

அரசியல்துறையினருக்கு காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். சக மனிதர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.

சித்திரை 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சனை நீங்கும். சூரியனால் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

சுவாதி:
இந்த மாதம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சைக் கேட்பதைக் குறைப்பது நல்லது.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்:
இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். கிரக சேர்க்கைகள் எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும்.

பரிகாரம்: லக்ஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 29, 30

*********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்