- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
தகுதிக்குத் தகுந்தாற் போல் நடந்து கொள்ளும் விருச்சிக ராசி அன்பர்களே!
இந்த மாதம் எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டினாலும் அதேநேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் ஆராய்ந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நன்மை அளிக்கும். வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். எதிர்பார்த்தபடி எதுவும் நல்லதாகவே நடக்கும். குருவின் விரய ஸ்தான சஞ்சாரத்தால் மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.
» துலாம் ராசி அன்பர்களே! மே மாத பலன்கள்; மனோ தைரியம்; எதிர்பார்த்த உதவி; இல்லத்தில் மகிழ்ச்சி!
தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.
குடும்பாதிபதி குருவின் சார பலத்தால் குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியைத் தரும்.
பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
அரசியல்துறையினரின் செல்வாக்கு உயரும். தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம். கட்சித் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். சொன்ன வாக்கினை காப்பாற்றுவதற்கு நண்பர்கள் உறுதுணை புரிவார்கள்.
கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். படைப்புகளை வெளியிட சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள். மேற்படிப்பிற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
உடல்நலத்தினை பொறுத்தவரை நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும்.
விசாகம்:
இந்த மாதம் தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும்போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்கச் செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.
அனுஷம்:
இந்த மாதம் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான சமயமிது. ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். உபதொழில் ஆரம்பிக்க வாய்ப்புகள் குவியும்.
கேட்டை:
இந்த மாதம் ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். புதிய வீடு கட்டும் பணியோ அல்லது நிலம் வாங்கும் பணியோ மேற்கொள்வீர்கள். மிக நல்ல பலன்களை தடையின்றி அனுபவிப்பீர்கள். திட்டமிட்ட சில காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள்.
பரிகாரம்: வேல் விருத்தம் பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்பக் கஷ்டம் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9
***********
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
18 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago