- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் குரு, சனி - ரண ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.
கிரக மாற்றங்கள்:
5ம் தேதி - குரு பகவான் அதிசாரமாக பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10ம் தேதி - புதன் பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11ம் தேதி - சுக்கிரன் பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13ம் தேதி - செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14ம் தேதி - சூர்ய பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28ம் தேதி - புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
துலாம் ராசி அன்பர்களே!
இந்த மாதம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும்.
பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும்.
தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையானப் பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும்.
அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்க்கட்சியினரின் உதவி கிடைக்கும். கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும்.
கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவர். உங்களை உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
சித்திரை:
இந்த மாதம் அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஸ்வாதி:
இந்த மாதம் காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும். காரியத்தடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
விசாகம்:
இந்த மாதம் வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரப் போட்டிகள் குறையும். எல்லாத் துறைகளிலும் லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் ராஜராஜேஸ்வரியை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25, 26
அதிர்ஷ்ட கிழமை: புதன், வெள்ளி
அதிர்ஷ்ட எண்: 5, 6
அதிர்ஷ்ட திசை: மேற்கு, வடமேற்கு
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை
*********************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago