- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - விரய ராசியில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.
கிரக மாற்றங்கள்:
5ம் தேதி - குரு பகவான் அதிசாரமாக பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10ம் தேதி - புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11ம் தேதி - சுக்கிரன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13ம் தேதி - செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார்.
14ம் தேதி - சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28ம் தேதி - புதன் பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
மிதுன ராசி அன்பர்களே!
இந்த மாதம் வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதுர்யம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். மாத இறுதியில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கக் கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.
பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.
அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். உங்கள் செயல்பாடுகளை மேலிடம் உற்று கவனிக்கும். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்பு நீங்கும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து உங்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் உயர வழி பிறக்கும். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். வேலைப்பளு காரணமாக வெளியில் தங்க நேரலாம்.
மாணவர்களுக்கு பாடங்களை கவனமாகப் படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளைச் செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவார்கள்.
திருவாதிரை:
இந்த மாதம் உயர் பதவிகளும் கிடைக்கக் கூடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதைக் கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலைத் தரும்.
புனர்பூசம்:
இந்த மாதம் தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.
பரிகாரம்: புதன் கிழமைகளில் நவக்கிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியைத் தரும். பொருளாதாரம் உயரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17
அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு, புதன்
அதிர்ஷ்ட எண்: 1, 5
அதிர்ஷ்ட திசை: மேற்கு, தென்மேற்கு
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை
*********************************
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago