மீன ராசி அன்பர்களே!  2021 ஜனவரி மாத ராசிபலன்கள்; நல்ல தகவல்கள்; பண வரவு உண்டு; வாக்குவாதம் வேண்டாம்; புதிய நண்பர்கள்! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் ராகு, பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் புதன், குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:

06-01-2021 அன்று சுக்கிர பகவான் காலை 07:18 மணிக்கு பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-01-2021 அன்று சுக்கிர பகவான் காலை 07:18 மணிக்கு தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள் :

எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் சாமர்த்தியமாகச் செயல்பட்டு எதிலும் வெற்றிபெறும் மீன ராசியினரே!

நீங்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்பவர்கள். இந்த காலகட்டத்தில் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும்.

விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாகச் செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைக் கிடைக்கப் பெறுவீர்கள். அத்துடன் பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும். சக ஊழியர்கள் மூலம் நீங்கள் எடுத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களால் பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. சுபச் செலவுகள் ஏற்படும்.

பெண்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரத்து கூடும்.
கலைத்துறையினருக்கு செலவினங்கள் குறையும். வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம்.

அரசியல்துறையினருக்கு பொதுவாக தொல்லைகளும் பிரிவினையும் நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். தைரியம் கூடும். வாழ்நாள் முழுவதும் ஏற்படவிருக்கும் கஷ்டங்களை அறியாமல் தவறான முடிவுகளில் இறங்க வேண்டாம்.

மாணவர்களுக்கு திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். எதிர்ப்புகள் விலகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்து கூடும்.

ரேவதி:
இந்த மாதம் மாணவர்கள் கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கப் பாடுபடுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். காரியத் தடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். அவ்வப்போது செய்வது சரிதானா என்ற தயக்கம் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும்.

அடுத்தவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து 9 ஏழைகளுக்கு தயிர் சாதம் அன்னதானமாக வழங்கி வாருங்கள். செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 7, 8

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29
***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

16 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

மேலும்