மீன ராசி அன்பர்களே! அக்டோபர் மாத பலன்கள் ; தம்பதி ஒற்றுமை; பணத்தேவை பூர்த்தியாகும்; வாக்குவாதம் வேண்டாம்; பிள்ளைகளிடம் கூடுதல் கவனம்; கூடுதல் பணி! 

By செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

வாழ்வில் எதையும் சமாளித்து முன்னேறும் சாமர்த்தியம் மிக்க மீன ராசியினரே.

இந்த மாதம் ராசியாதிபதி குரு பார்வையால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் அவப்பெயர் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். திடீர் மனக் குழப்பத்தை ஏற்படுத்தும். முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும்.

தொழில், வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

பெண்களுக்கு பணத் தேவை அதிகரிக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். வேலைப் பளு அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்தவொரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சலுக்குப் பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும்.

மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் மெத்தனம் காணப்படும். கல்வியில் வேகம் காட்டுவது வெற்றிக்கு நல்லது.

பூரட்டாதி 4ம் பாதம்:

இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினைக் கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

உத்திரட்டாதி:

இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.

ரேவதி:
இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி பகவானை வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக் குழப்பம் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்;

சந்திராஷ்டம தினங்கள்: 17, 18

அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12

*****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்