ரிஷப ராசி அன்பர்களே! உத்தியோக உயர்வு; நண்பர்களால் உதவி; பண வரவு; கடனில் எச்சரிக்கை; செப்டம்பர் மாத பலன்கள் 

By செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

சொன்ன வார்த்தையைக் காப்பாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!

நீங்கள் கடுமையாக உழைக்கத் தயங்காதவராக இருப்பீர்கள். இந்த மாதம் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். பொருள் வரவு உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபாரப் போட்டிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.

கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

கலைத்துறையினருக்கு தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

பெண்கள் திறமையாக சமாளித்து எந்த பிரச்சினையிலும் சாதகமான முடிவைப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும்.
மாணவர்களுக்கு தேர்வு பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் எதுசொன்னாலும் அவற்றைச் சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

ரோகிணி:
இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும்.கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறலாம். மேலதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும்.

பரிகாரம்: பவுர்ணமியில் பூஜை செய்து அம்மனை வணங்கி வாருங்கள். எல்லாக் காரியங்களும் நல்லபடியாக நடக்கும். மனக்கவலை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்