கடகம், சிம்மம், கன்னி - மே மாத பலன்கள்

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம்
(புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)

எந்த ஒரு விஷயத்தையும் அது எப்படி நடக்கும் சாதகமா பாதகமா என்று முன்கூட்டியே யூகித்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ளும் திறமையுடைய கடக ராசியினரே!
நீங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மதிப்பளிப்பவர். இந்தக் காலகட்டத்தில் ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு உங்கள் ராசி - தைரிய ஸ்தானம் - லாப ஸ்தானம் ஆகிய ஸ்தானங்களைப் பார்க்கிறார்.
தனாதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் புதனுடன் சஞ்சரிக்கிறார். வீண் செலவுகள் குறையும் எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடு செலவு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. மேலிடத்துடன் கவனமாக இருப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
குடும்பாதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் இருக்கிறார். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.
பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவு ஏற்படலாம். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் தொடர்பான காரியங்களை யோசித்து செய்வது நல்ல பலன் தரும். வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். புத்தி சாதுர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
அரசியல்துறையினருக்கு மேலிடம் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சுத் திறமை அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் உண்டாகும்.

புனர்பூசம்:
இந்த மாதம் உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

பூசம்:
இந்த மாதம் அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதாரணமாகப் பேசுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

ஆயில்யம்:
இந்த மாதம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். சாதகமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: திங்கள்கிழமையில் ஆதிபராசக்தியை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். மன அமைதியைத் தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: சந்திரன், சுக்கிரன்;
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9, 10
****************************************
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று லட்சியத்துடன் இருக்கும் சிம்ம ராசியினரே!
நீங்கள் எதிலும் முதலாவதாக இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியைத் தரும். ராசியாதிபதி சூரியன் பாக்கியஸ்தானத்தில் புதனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார்.
பணவரத்து எதிர்பார்த்ததைப் போல இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். அதே வேளையில் ராசியை செவ்வாய் பார்ப்பதால் மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களைக் கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க நேரும். மேலதிகாரிகள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். கணவன் மனைவியிடையே மனஸ்தாபங்கள் அகலும். எனவே கவனமாக எதையும் பேசுவது நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும். அக்கம் பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படும்.
கலைத்துறையினருக்கு எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும்.

அரசியல்துறையினருக்கு நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். மேலிடத்திடம் நெருக்கம் அதிகரிக்கும். மனம் மகிழும் காரியங்கள் நடக்கும்.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

மகம்:
இந்த மாதம் வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

பூரம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

உத்திரம்:
இந்த மாதம் குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோயிலுக்கு சென்று சிவனையும் நவக்கிரகத்தில் சூரியனையும் தீபம் ஏற்றி வழி படுவது எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: சூரியன், சுக்கிரன்
சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12
*************************************************

கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

சாதுர்யமாகப் பேசி சகல காரியங்களையும் சாதிக்கும் திறமை உள்ள கன்னி ராசியினரே!
நீங்கள் உழைப்பினால் உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் அஷ்டம ஸ்தானத்தில் சூரியனுடன் இருக்கிறார். உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகராறுகள் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளைப் பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.

தொழில் ஸ்தானத்தை சுக்கிரன் அலங்கரிக்கிறார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப் பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

பெண்களுக்கு சாதக பாதகங்களை பற்றி கவலைப்படாமல் எந்த காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.
கலைத்துறையினருக்கு பேச்சுத் திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். பயணங்கள் செல்ல நேரலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.
அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த காரியங்கள் தடைகளின்றி முடியும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். மனஉறுதி அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

உத்திரம்:
இந்த மாதம் வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும். எந்தக் காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது. பணம் சார்ந்த கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.

ஹஸ்தம்:
இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். ராசிநாதன் புதன் சஞ்சாரத்தால் புத்தித் தெளிவு உண்டாகும். எந்த பிரச்சினையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.

சித்திரை:
இந்த மாதம் மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சினைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்கப் பெறலாம். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

பரிகாரம்: புதன்கிழமையில் ஆஞ்சனேயரை வெண்ணெய் சாற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14
*******************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்