கடகம்,  சிம்மம், கன்னி ; ஏப்ரல் மாத பலன்கள்!

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியம் உடைய கடக ராசியினரே.


இந்த மாதம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.


தொழில், வியாபாரம், வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதுரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.


குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.


பெண்களுக்கு: காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.


அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். தொகுதியில் மதிப்பு கூடும். கோஷ்டிப் பூசலையும் தாண்டி சாதிப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு : யதார்த்தமான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.


மாணவர்களுக்கு : புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.

புனர்பூசம்:
இந்த மாதம் மற்றவர்களுக்கு வலியச் சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். எதிலும் வெற்றியே கிடைக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும்.வாய்ப்புகளை ப் பயன்படுத்திக் கொள்வது உங்கள் எதிர்காலத்திற்கு உதவும்.கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கு முன்னேற்றமும், ஆதாயங்களும் கிடைக்கும்.

பூசம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். அரசியல்துறையினருக்கு பொதுகாரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை.

ஆயில்யம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும்.வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். பாராட்டு பெறுவது கடினம். மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு மறையும்.

பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12
***************************************************************************************************


சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)


எடுக்கும் பணிகளை செவ்வனே செய்து முடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே.


செவ்வாய் குரு ராசியைப் பார்க்கிறார்கள். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.


தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதுரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.


குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள்.


பெண்களுக்கு : உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.


அரசியல்வாதிகளுக்கு : சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கட்சி மேல்மட்டத்தால் அலைக்கழிக்கப்படுவர்.


கலைத்துறையினருக்கு : படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும். உங்களது கலைத்திறன் வளரும்.
மாணவர்களுக்கு : சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.

மகம்:
இந்த மாதம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும். பெண்கள் பெரியோர்களின் ஆசியைப் பெற்றால் எந்த காரியத்திலும் வெற்றி பெறலாம். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

பூரம்:
இந்த மாதம் முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்கள் எதிலும் சுறுசுறுப்புடன் இருப்பது அவசியம். பாடங்களை படிப்பதில் கவனம் தேவை.

உத்திரம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. தெய்வப் பணிகளில் ஈடுபட்டால் மனத் தெளிவும், நிம்மதியும் உண்டாக தடை இருக்காது.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சினைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 20, 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15
***************************************************************************************************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)


எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் செய்து முடிக்கும் கன்னி ராசியினரே.


இந்த மாதம் ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் மறைந்திருந்தாலும் நட்பு வீட்டில் சஞ்சரிக்கிறார். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். ராசிநாதனின் சார பலத்தின் மூலம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும்.


தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.


குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.


பெண்களுக்கு : நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும்.


அரசியல்வாதிகளுக்கு ; கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப் படுவீர்கள்.


கலைத்துறையினருக்கு : மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்பு தேடிவரும். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம்.


மாணவர்களுக்கு : சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. பாடங்கள் எளிமையாக தோன்றும்.

உத்திரம்:
இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். புது முயற்சிகளில் ஈடுபடுவது வெற்றியைத் தரும்.சக மாணவர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்வது அவசியம்.

ஹஸ்தம்:
இந்த மாதம் முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சினைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். உழைத்துப் பயனடைய முயலுங்கள். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களிடம் அதிகம் உதவியை எதிர்பார்த்தால் ஏமாற்றம் உண்டாகக்கூடும்.

சித்திரை:
இந்த மாதம் மனகுழப்பம் தீரும். எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். வழக்கமான பணிகளில் ஈடுபட்டு செலவினத்தை அதிகப் படுத்தாமல் இருப்பது நன்மை தரும். பெரியவர்களுக்கு முடிந்த அளவிற்கு உதவி செய்வது நலம் தரும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17
***************************************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

14 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்