விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - ராசியில் புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14.01.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சூரியன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18.01.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 28.01.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த மாதம் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாக திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும். பெண்களுக்கு மனோதைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும். கலைத்துறையினருக்கு நன்மை தீமை பற்றிய கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வீர்கள். போட்டிகள் மறையும். ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும்.
மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசியல் துறையினருக்கு கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரத்து கூடும். மனக்குழப்பம் நீங்கும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். ராகுவின் சஞ்சாரம் பணவரத்தை தரும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
விசாகம் 4ம் பாதம்: குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கடந்த காலமாக தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.
அனுஷம்: விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தில் நிலவிவந்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக மறையும். தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும் பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேரும். உத்தியோகம் பார்ப்பவர்கள் பிந்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் காண்பர்.
கேட்டை: மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை மேம்படும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு பணியிடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள் உயர்வு போன்றவை கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகரமாக இருக்கும். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். வேலையின்றி தவிக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை திங்கள், வெள்ளி; தேய்பிறை திங்கள், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 12, 13 | அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23 | இந்தமாதம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
21 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago