மீனம் ராசியினருக்கான ஆகஸ்ட் மாத பலன்கள் முழுமையாக | 2024

By Guest Author

மீனம் ( பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ) கிரகநிலை - ராசியில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ), சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்: 01-08-2024 அன்று சுக்கிரன் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 16-08-2024 அன்று சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-08-2024 அன்று சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-08-2024 அன்று செவ்வாய் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 31-08-2024 அன்று புதன் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: நட்பினை உயிரை விட மதிக்கும் மீன ராசியினரே! இந்த மாதம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். அனுகூலமான பலன்களை தரும். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். பெண்களுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக்கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும்.

அரசியல்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பூரட்டாதி 1ம் பாதம்: இந்த மாதம் குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் பிள்ளைகளிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும்.

உத்திரட்டாதி: இந்த மாதம் துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

ரேவதி: இந்த மாதம் வீண் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சினையில் சிக்கி கொள்ளலாம். திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும். ஆன்மிக எண்ணம் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும்.

பரிகாரம்: சிவபெருமானை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 11, 12 | அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 5, 31 | ஆகஸ்ட் மாத கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE