மேஷம்: அஸ்வினி: இந்த மாதம் கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடல் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.
பரணி: இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சினைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும். போட்டிகள் குறையும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகனை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய்தொழில் சிறக்கும் | சந்திராஷ்டம தினங்கள்: 23, 24, 25 | அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17. முழுமையான பலன்களுக்கு > மேஷம் ராசியினருக்கான மே மாத பலன்கள் முழுமையாக | 2024
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். காரிய தடைகள் வரலாம். வழக்குகளில் சாதகமான போக்கை தரும்.
ரோகிணி: இந்த மாதம் நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண்டாகலாம்.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த மாதம் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சினை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம்.
பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும் | சந்திராஷ்டம தினங்கள்: 26, 27 | அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19, 20. முழுமையான பலன்களுக்கு > ரிஷபம் ராசியினருக்கான மே மாத பலன்கள் முழுமையாக | 2024
மிதுனம்: மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர் கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். பணவரத்தில் இருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள்.
திருவாதிரை: இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மனத்தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் நட வடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மனத்தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: பெருமாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும் | சந்திராஷ்டம தினங்கள்: 01, 02, 28, 29 | அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22. முழுமையான பலன்களுக்கு > மிதுனம் ராசியினருக்கான மே மாத பலன்கள் முழுமையாக | 2024
கடகம்: புனர் பூசம் 4ம் பாதம்: இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
பூசம்: இந்த மாதம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும்.
ஆயில்யம்: இந்த மாதம் சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது பற்றி முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் உயர் கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இடையிடையே சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு மறையும்.
பரிகாரம்: அபிராமி அந்தாதி சொல்லி அம்மனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். பஞ்சமுக விளக்கு ஏற்றுவது சிறந்தது | சந்திராஷ்டம தினங்கள்: 03, 04, 30, 31 | அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24, 25. முழுமையான பலன்களுக்கு > கடகம் ராசியினருக்கான மே மாத பலன்கள் முழுமையாக | 2024
சிம்மம்: மகம்: இந்த மாதம் சுறுசுறுப்பு குறையும். யோகா செய்வதால் அந்த குறைபாடு நீங்கும். மனநிலை சீராக இருக்கும். மக்கள் நலம் சிறப்பாக இருக்கும். பெற்றோர் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். கலைத்துறையினர் சிறப்பு பெறுவார்கள். குறிப்பாக நட்சத்திரங்கள், சங்கீத வித்வான்கள் ஆகியோருக்கு புகழ் ஓங்கும். டிவி போன்றவைகளில் மக்கள் தொடர்பு கொண்டிருப்பவர்கள், சிறப்பான பாராட்டைப் பெறுவார்கள்.
பூரம்: இந்த மாதம் வெளிநாட்டு பயணம் ஆதாயம் தரும். ஓரிரு பெரியவர்கள் எதிர்பாராத வகையில் சன்மானம் வழங்குவார்கள். மருத்துவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் ஏற்ற காலகட்டமிது. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். பொருளாதாரச் சூழ்நிலைகள் செழிப்பாக மாறும். ஏழைகள் மீது கருணை கொண்டு உதவிகள் செய்தால் இறைவனின் அருள் உங்களுக்கு கிட்டும்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் ஆற்றலும் ஐஸ்வர்யமும் கூடும். துணிவும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். அதன்மூலம் சாதனைகளை துணிந்து செய்வீர்கள். மாணவர்களுக்கு உற்சாகமான நாள். வேலை மாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமாகும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி மாற்றம் உண்டு. வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரசு அனுகூலம் உண்டு. வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும்.
பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுவது தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கும். செல்வம் சேரும் | சந்திராஷ்டம தினங்கள்: 05, 06 | அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27. முழுமையான பலன்களுக்கு > சிம்மம் ராசியினருக்கான மே மாத பலன்கள் முழுமையாக | 2024
கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் சக ஊழியர்களுடன் ஒத்துப் போவீர்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபட உதவும் மாதமிது. உற்பத்திச் சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வின்றி தொழில் நடைபெறும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற வேண்டிய காலகட்டமிது.
அஸ்தம்: இந்த மாதம் பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டும். மக்கள் நலனிற்கு எந்த குறைபாடும் இருக்காது. கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். நம்பிக்கையுடன் செய்யும் இந்த வழிபாட்டால் நேர்மறையான செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு வழிகள் வந்து சேரும்.
சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த மாதம் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. எதிர்கால படிப்புகளுக்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்கலாம். குடும்பத்தில் நடைபெற இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது.
பரிகாரம்: ஏதேனும் ஒரு காவல் தெய்வத்தை புதன்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை நீங்கும் | சந்திராஷ்டம தினங்கள்: 07, 08 | அதிர்ஷ்ட தினங்கள்: 01, 02, 28, 29. முழுமையான பலன்களுக்கு > கன்னி ராசியினருக்கான மே மாத பலன்கள் முழுமையாக | 2024
துலாம்: சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த மாதம் தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படும். வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கவுரவம் அதிகரிக்கும்.
சுவாதி: இந்த மாதம் கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மை தரும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சினையில் சிக்கி கொள்ளலாம்.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும்.
பரிகாரம்: அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும் | சந்திராஷ்டம தினங்கள்: 09, 10 | அதிர்ஷ்ட தினங்கள்: 03, 04, 30, 31. முழுமையான பலன்களுக்கு > துலாம் ராசியினருக்கான மே மாத பலன்கள் முழுமையாக | 2024
விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறைச் சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
அனுஷம்: இந்த மாதம் தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பலவிதமான பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள்.
கேட்டை: இந்த மாதம் தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சினைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.
பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்க அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும் | சந்திராஷ்டம தினங்கள்: 11, 12 | அதிர்ஷ்ட தினங்கள்: 05, 06. முழுமையான பலன்களுக்கு > விருச்சிகம் ராசியினருக்கான மே மாத பலன்கள் முழுமையாக | 2024
தனுசு: மூலம்: இந்த மாதம் முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம்.
பூராடம்: இந்த மாதம் உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்வர். தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான முயற்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். சளி மற்றும் மார்புத்தொல்லை வரலாம். உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும்.
பரிகாரம்: சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: 13, 14, 15 | அதிர்ஷ்ட தினங்கள்: 07, 08. முழுமையான பலன்களுக்கு > தனுசு ராசியினருக்கான மே மாத பலன்கள் முழுமையாக | 2024
மகரம்: உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் வீடு, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் தடையாக இருந்து வந்தது. இனி அது மாறும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும்.
திருவோணம்: இந்த மாதம் பிள்ளைகளின் வளர்ப்பின் போது கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம்.
அவிட்டம் 1,2 பாதங்கள்: இந்த மாதம் தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தியையும் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சினைகளும் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி ஏற்படும். சந்திராஷ்டம தினங்கள்: 16, 17 | அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10. முழுமையான பலன்களுக்கு > மகரம் ராசியினருக்கான மே மாத பலன்கள் முழுமையாக | 2024
கும்பம்: அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். தடங்கல் இன்றி எல்லா காரியத்தையும் முடிப்பீர்கள். பண தட்டுப்பாடு நீங்கும்.
சதயம்: இந்த மாதம் குழப்பங்கள் தீரும். எந்த ஒரு காரியத்திலம் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள் காலதாமதமாக முடியும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் வாடிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.
பரிகாரம்: விநாயகரை சனிக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும் |சந்திராஷ்டம தினங்கள்: 18, 19, 20 | அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12. முழுமையான பலன்களுக்கு > கும்பம் ராசியினருக்கான மே மாத பலன்கள் முழுமையாக | 2024
மீனம்: பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை. அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.
உத்திரட்டாதி: இந்த மாதம் வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவை சேமிப்பீர்கள். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.
ரேவதி: இந்த மாதம் வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று வீரபத்திர சுவாமியை வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: 21, 22 | அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago