மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் புதன், ராகு, செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், குரு, சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றங்கள்: 01-05-2024 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 07-05-2024 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-05-2024 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 20-05-2024 அன்று சுக்கிர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 24-05-2024 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 31-05-2024 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்துக்கு மாறுகிறார்.
பலன்கள்: எவ்வளவு தோல்விகள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் அத்தனையையும் முறியடித்து வாழ்வில் வெற்றி பெறும் ஆற்றல் உடைய மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் எதிலும் நன்மையே நடக்கும். எந்த ஒரு வேலை பற்றியும் அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. திடீர் பணதேவை உண்டாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
» குருப் பெயர்ச்சி: மீனம் ராசியினருக்கு எப்படி? - 01.05.2024 முதல் 13.04.2025 வரை
» மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஏப்.25 - மே 1
குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை. கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. பெண்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது. எதிலும் நிதானம் தேவை. மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை. அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.
உத்திரட்டாதி: இந்த மாதம் வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவை சேமிப்பீர்கள். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.
ரேவதி: இந்த மாதம் வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று வீரபத்திர சுவாமியை வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: 21, 22 | அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago