கடகம் ராசியினருக்கான மே மாத பலன்கள் முழுமையாக | 2024

By Guest Author

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் புதன், ராகு, செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், குரு, சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்: 01-05-2024 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 07-05-2024 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-05-2024 அன்று சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 20-05-2024 அன்று சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 24-05-2024 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 31-05-2024 அன்று செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: கருமமே கண்ணாக இருக்கும் கடக ராசி அன்பர்களே! நீங்கள் எல்லோராலேயும் நேசிக்க கூடியவராக இருப்பீர்கள். கொஞ்சம் பதற்றத்தை குறைத்துக் கொள்வது நல்லது. இந்த மாதம் முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். வெளியூர் பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பவர்கள். மன தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும்.

தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்குவரத்து மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்து இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.

குடும்பாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனதெளிவு உண்டாகும். பணவரத்து இருக்கும்.

கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

பூசம்: இந்த மாதம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும்.

ஆயில்யம்: இந்த மாதம் சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது பற்றி முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் உயர் கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இடையிடையே சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு மறையும்.

பரிகாரம்: அபிராமி அந்தாதி சொல்லி அம்மனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். பஞ்சமுக விளக்கு ஏற்றுவது சிறந்தது | சந்திராஷ்டம தினங்கள்: 03, 04, 30, 31 | அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24, 25

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 mins ago

ஜோதிடம்

12 mins ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்