மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான மார்ச் மாத பலன்கள் @ 2024

By Guest Author

மேஷம் அஸ்வினி: இந்த மாதம் கடன் பிரச்சினைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பண வசதி கிடைக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

பரணி: இந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் வேலையில் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி பூ சாற்றி அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன் | சந்திராஷ்டம தினங்கள்: 03, 04, 30, 31 | அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23, 24 | முழுமையான பலன்களுக்கு > மேஷம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் முழுமையாக | 2024

ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை தீரும். உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும்.

ரோகிணி: இந்த மாதம் காரியங்களை சாதிப்பீர்கள். மாணவர்கள் பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த மாதம் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். கடந்த காலங்களில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 05, 06 | அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26 | முழுமையான பலன்களுக்கு > ரிஷபம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் முழுமையாக | 2024

மிதுனம் மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதிநுட்பத்தால் எந்த பிரச்சினையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்ல முடிவுக்கு வரும்.

திருவாதிரை: இந்த மாதம் தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்க பிரச்சினைகள் தீரும். பண கஷ்டம் தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 07, 08 | அதிர்ஷ்ட தினங்கள்: 01, 02, 27, 28, 29 | முழுமையான பலன்களுக்கு > மிதுனம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் முழுமையாக | 2024

கடகம் புனர் பூசம் 4ம் பாதம்: இந்த மாதம் எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும்.

பூசம்: இந்த மாதம் உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

ஆயில்யம்: இந்த மாதம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். காரிய வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.

பரிகாரம்: சரஸ்வதி தேவியை பூஜித்து வர காரியங்களில் வெற்றி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன் | சந்திராஷ்டம தினங்கள்: 09, 10 | அதிர்ஷ்ட தினங்கள்: 03, 04, 30, 31 | முழுமையான பலன்களுக்கு > கடகம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் முழுமையாக | 2024

சிம்மம் மகம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சினை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பூரம்: இந்த மாதம் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும். காரிய வெற்றி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 11, 12| அதிர்ஷ்ட தினங்கள்: 05, 06 | முழுமையான பலன்களுக்கு > சிம்மம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் முழுமையாக | 2024

கன்னி உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மேலும் மனநிம்மதி ஏற்படும். தொலை தூரப்பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும்.

அஸ்தம்: இந்த மாதம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்டதூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

பரிகாரம்: நரசிம்மரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். எதிலும் வெற்றி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 13, 14 | அதிர்ஷ்ட தினங்கள்: 07, 08 | முழுமையான பலன்களுக்கு > கன்னி ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் முழுமையாக | 2024

துலாம் சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த மாதம் உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன் - மனைவியிடையே சின்னச்சின்ன பிரச்சினைகள் ஏற்படும். உற்றார் - உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும்.

சுவாதி: இந்த மாதம் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொலைதூரங்களிலிருந்து நல்ல செய்திகள் வரும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும்.

விசாகம் 1, 2, 3ம் பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கு இடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

பரிகாரம்: வைஷ்ணவி தேவியை வழிபட்டுவர நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து கூடும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 15, 16 | அதிர்ஷ்ட தினங்கள்: 09, 10 | முழுமையான பலன்களுக்கு > துலாம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் முழுமையாக | 2024

விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்

அனுஷம்: இந்த மாதம் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். காரியங்களில் இருந்த தடைகள் நீங்கி சாதகமாக நடந்து முடியும். தேவையற்ற மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம்.

கேட்டை: இந்த மாதம் வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: காசி விசாலாட்சியை வழிபட எதிர்ப்புகள் அகலும். காரிய தடை நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19 | அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12 | முழுமையான பலன்களுக்கு > விருச்சிகம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் முழுமையாக | 2024

தனுசு மூலம்: இந்த மாதம் தொழில் வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின்போது கவனம் தேவை.

பூராடம்: இந்த மாதம் அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது. பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: நவக்கிரகத்தில் குருவை நெய் தீபம் ஏற்றி வணங்கி வருவது மன அமைதியை தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 20, 21 | அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14 | முழுமையான பலன்களுக்கு > தனுசு ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் முழுமையாக | 2024

மகரம் உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

திருவோணம்: இந்த மாதம் தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும்.

அவிட்டம் 1,2 பாதம்: இந்த மாதம் எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை தீரும். உதவிகளை செய்து மன திருப்தி அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்யம் பெறும். கஷ்டங்கள் குறையும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன் | சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24 | அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16 | முழுமையான பலன்களுக்கு > மகரம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் முழுமையாக | 2024

கும்பம் அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது.

சதயம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும்.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 25, 26 | அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19 | முழுமையான பலன்களுக்கு > கும்பம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் முழுமையாக | 2024

மீனம் பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் எதிர்பார்த்த லாபம் வரும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மையால் காரிய வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

உத்திரட்டாதி: இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். பணவரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல்வீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

ரேவதி: இந்த மாதம் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலைகள் திருப்திகரமாக நடந்து முடியும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சினை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 01, 02, 27, 28, 29 | அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21 | முழுமையான பலன்களுக்கு > மீனம் ராசியினருக்கான மார்ச் மாத பலன்கள் முழுமையாக | 2024

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்