சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது, சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றங்கள்: 04-02-2024 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-02-2024 அன்று சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-02-2024 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-02-2024 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: மற்றவர்களுக்காக போராடும் குணமுடைய சிம்ம ராசி அன்பர்களே... நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர். இந்த மாதம் காரியதடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான் சூழ்நிலை நிலவும்.
» 2024 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள் - ஒரு பார்வை
» ‘அந்தஸ்து உயரும்’ - கன்னி ராசியினருக்கான 2024 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்திதரும்.
கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
அரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.
மகம்: இந்த மாதம் சக ஊழியர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது. பணவரத்து அதிகமாகும். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.
பூரம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேலதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர் பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய் வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: 13, 14 | அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago