தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) | கிரகநிலை: ராசியில் சூரியன், செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன், புதன் என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றங்கள்: 08-01-2024 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். | 15-01-2024 அன்று சூர்ய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார். | 18-01-2024 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார். | 27-01-2024 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: குரு பகவானை ராசிநாதனாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். பணவரத்து தாமதப்படலாம். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. எனவே அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
அரசியல்துறையினருக்கு நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும் மாணவர்கள் பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.
மூலம்: இந்த மாதம் தொழில் வியபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.
பூராடம்: இந்த மாதம் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவி உண்டாகும்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும்.
பரிகாரம்: முருகனை வணங்கிவர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். | அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன்; | சந்திராஷ்டம தினங்கள்: 25, 26, 27 | அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19, 20
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago