மிதுனம் ராசியினருக்கான செப்டம்பர் மாத பலன்கள் முழுமையாக | 2023

By Guest Author

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) | கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு, ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்: 17-09-2023 அன்று சூர்ய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 27-09-2023 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-09-2023 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற மிதுன ராசியினரே இந்த மாதம் எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். பாக்கியஸ்தானத்தில் கேது இருக்கிறார். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம்.

குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும். கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.

அரசியல் துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பணவரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல்வீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலைகள் திருப்திகரமாக நடந்து முடியும்.

திருவாதிரை: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் இருந்த பணபிரச்சனை குறையும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனை குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமையை அதிகப்படும். உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும்.

பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்க எதிர் பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனை தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 25, 26 | அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

19 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்