மேஷம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். சாதுர்யமான பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் சேரும்.
ரிஷபம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணவரவு உண்டு.
மிதுனம்: கையில் பணம் புரளும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உடன்பிறந்தவர்களின் நீண்டநாள் ஆசை களை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பொருட்கள் சேரும்.
கடகம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தாரு டன் மனம் விட்டுப் பேசுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பால்ய நண்பர்களை சந்திப்பீர்.
» விஜய்யின் லியோ படத்தில் நடிக்கும் நடிகர் நாசரின் தம்பி ஜவஹர்
» 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றார் ராகுல் காந்தி
சிம்மம்: முகப்பொலிவுடன் காணப்படுவீர்கள். முடியாமல் போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள். அக்கம் - பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். யாருக்கும் எப்போதும் உறுதிமொழி தர வேண்டாம்.
கன்னி: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டி ருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். மாலை முதல் குழப்பம், பிரச்சினைகள் விலகும்.
துலாம்: கணவன் - மனைவிக்குள் விவாதங்கள் வந்து போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நண்பர்கள் உதவுவர்.
விருச்சிகம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.
தனுசு: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.
மகரம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமான வர்களின் சந்திப்பு நிகழும். ஊர் திருவிழாவில் முதல் மரியாதை கிடைக்கும். பணவரவு உண்டு.
கும்பம்: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். மாலை முதல் மகிழ்ச்சி தொடங்கும். இழுபறி வழக்கில் தீர்ப்பு கிடைக்கும்.
மீனம்: கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மாலை முதல் அலைச் சல்கள் அதிகரிக்கும். வாகனம் செலவு வைக்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago