மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புது வேலை அமையும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். உறவினர் வருகையால் வீடு களைகட்டும்.
ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கலை பொருட்கள் சேரும்.
கடகம்: திடீர் பணவரவு, புகழ் உண்டு. பழுதான வாகனம் சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். மனதில் இருந்த தேவையில்லாத பயம் விலகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.
சிம்மம்: சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு சமயோஜித மாகப் பேசும் சாமர்த்தியம் வரும். ஓரளவு பணவரவும் உண்டு. பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. பொருள் சேரும்.
கன்னி: வேலைச்சுமை அதிகரிக்கும். முடிந்துவிடும் என நினைத்த விஷயங்கள் கூட அலைய வைத்து முடியும். வாயு தொந்தரவால் நெஞ்சு வலி, வயிறு உப்புசம், அலர்ஜி வரக்கூடும். வீண் விவாதத்தை தவிர்ப்பீர்.
துலாம்: அலைச்சலுடன் ஆதாயம் உண்டு. பயணங்கள் அதிகரிக்கும். செலவுகளும் இருக்கும். வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு கிடைக்கும். அரசு காரியங்கள் முடியும்.
விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும்.
தனுசு: புதிய திட்டங்கள் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். கிராமத்து திருவிழாவில் கலந்து கொள்வீர்கள்.
மகரம்: சோம்பல் நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அழகு, இளமை கூடும். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்குவீர்கள். பிள்ளைகளுடன் அதிக நேரம் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கும்பம்: பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். தேவையற்ற வீண் பயம், கவலைகள் தோன்றி மறையும். நீண்ட நாளாக இழுபறியாக இருக்கும் வழக்கில் நிதானம் அவசியம். மின் சாதனங்கள் வாங்குவீர்கள்.
மீனம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. அலைச்சல் குறையும். வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago