இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By Guest Author

மேஷம்: உறவினர், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். மகளுக்கு திருமணம் கூடி வரும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றியுண்டு. பணவரவு திருப்தி அளிக்கும்.

ரிஷபம்: உறவினர் மத்தியில், மரியாதை கூடும். அடிமனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மிதுனம்: தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். திடீர் பயணச் செலவுகள் ஏற்படும்.

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மகான்கள், பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். கல்யாண முயற்சிகளும் நல்ல விதத்தில் முடியும். பல நாட்களாக இருந்து வந்த குழப்பம் தீரும்.

சிம்மம்: சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். புதிய வாய்ப்புகள் தொடர்பாக தீர யோசித்து முடிவெடுப்பது நல்லது. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

கன்னி: சுபச் செலவுகள் வரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்கள் இனி அனைத்து வசதிகளுடன் உள்ள வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் சந்திப்பால் நெகிழ்வீர்கள்.

விருச்சிகம்: திடீர் பணவரவு, செல்வாக்கு, மனை வாங்குதல் போன்றவை நடக்கும். சகோதர வகையில் உதவியுண்டு.
பிள்ளைகளின் மேற்படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். உறவினர் வருகையால் வீடு களைகட்டும்.

தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல் நலம் சீராகும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்வீர்கள். மனதில் இருந்த வீண்பயம் நீங்கி நிம்மதி பிறக்கும்.

மகரம்: வீண் விரயம், டென்ஷன், பிள்ளைகளால் பொருட் செலவு வரக்கூடும். வாகனம் பழுதாகும். அண்டை வீட்டாருடன் அளவாக பழகுங்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

கும்பம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் எளிதில் தீரும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். புதிய பொறுப்புகள், பதவி உங்களைத் தேடி வரும்.

மீனம்: மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். தம்பதிக்குள் பனிப்போர் மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். வீண் விவாதங்களை ஒதுக்கிவிட்டு, ஆக்கப்பூர்வமாக செயல்படவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

13 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

மேலும்