மேஷம்: குடும்பத்தாருடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புண்டு. கோபத்தைக் குறைத்து நிதானமாக செயல்படுங்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
ரிஷபம்: வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். வீண் அலைச்சல் ஏற்படும்.
மிதுனம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்களின் சிந்தனைத்திறன் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும்.
கடகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உங்களை விமர்சித்தவர்களும் அன்பு பாராட்டுவார்கள். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளியூர் பயணத்தால் சில காரியங்கள் நிறைவேறும்.
சிம்மம்: அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். இழுபறியாக இருந்த வேலைகள் இன்று முடிவுக்கு வரும். மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.
கன்னி: அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். கோபத்தால் பகை உண்டாகும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்யாதீர்கள்.
துலாம்: கடந்தகால இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். பணவரவு உண்டு.
விருச்சிகம்: ஆரவாரமின்றி சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. விலகியிருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.
தனுசு: சகோதரர் பாசமழை பொழிவார். சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
மகரம்: பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.
கும்பம்: குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். இழுபறியாக இருந்த தொகை
கைக்கு வரும். உடல் உஷ்ணத்தால் சில அவஸ்தைகள் ஏற்படக் கூடும்.
மீனம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago