மேஷம்: கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். கலை பொருட்கள் சேரும்.
ரிஷபம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்.
மிதுனம்: கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் வருகை உண்டு.
கடகம்: திட்டமிடாத செலவுகள், பயணங்கள் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம்.
சிம்மம்: கணவன் - மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய வீடு கட்ட கடனுதவி கிடைக்கும்.
கன்னி: பிள்ளைகளால் பெருமையடைவீர். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
துலாம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
விருச்சிகம்: தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும்.
தனுசு: மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். பூர்வீக சொத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். கலை பொருட்கள் சேரும்.
மகரம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.
கும்பம்: முன்கோபத்தை குறையுங்கள். எளிதாக முடிய வேண்டிய விஷயங்களைக் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். ஆன்மிக பயணம் ஏற்படும்.
மீனம்: முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வாகனத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உறவினர், நண்பர்களை அனுசரித்துப் போகவும். வீண் விவாதம் தவிர்ப்பீர்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago