மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமை யும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்.
ரிஷபம்: கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
மிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மனதில் வீண் கவலை உண்டாகும்.
கடகம்: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாவீர்கள். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். எதிலும் அவசரத்தை தவிர்க்க வேண்டும்.
» கலாச்சார ஒற்றுமைதான் இந்தியாவின் உயிர் - ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
» அனைத்து கோயில்களுக்கும் விரைவில் அறங்காவலர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
சிம்மம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாய மும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் எளிதாகும்.
கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டாம்.
துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப் படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர் களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை.
விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் வந்து போகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள்.
தனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவிவழியில் அந்தஸ்து உயரும். மனதுக்கு இதமான செய்தி வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்.
மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பணவரவு உண்டு.
கும்பம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஏற்றம் தரும் வகையில் அமையும். பொருள் சேரும்.
மீனம்: கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது அலைபேசியில் பேச வேண்டாம். எதிலும் நிதானம் தேவை. மனதில் பயம் தோன்றும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
15 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
16 hours ago
ஜோதிடம்
17 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago