இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By Guest Author

மேஷம்: அலைச்சலும், செலவுகளும் இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. உறவினர், நண்பர்கள் மத்தியில் அவப் பெயர் உண்டாகலாம்.

ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அழகு, இளமை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்ள திட்டமிடுவீர்கள்.

மிதுனம்: வேற்றுமொழி, மதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

கடகம்: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்
தில் மனம் செல்லும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பணவரவு உண்டு.

சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பழைய கடன்கள் ஒவ்வொன்றாகத் தீரும்.

கன்னி: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மன இறுக்கம் நீங்கும். வி.ஐ.பிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்
கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

துலாம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். எதையும் சாதிக்கலாம் என்ற துணிவு வரும். கலை பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: மறைமுக அவமானம் ஏற்படக் கூடும். கோயில் முக்கிய நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது நிம்மதி இழப்பீர்கள். யோகா, தியானம் செய்யவும்.

தனுசு: திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியமாக இருக்க
வேண்டாம். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மகரம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். முக்
கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீடு, வாகன யோகம் அமையும். வீண் விவாதம் தவிர்க்கவும்.

கும்பம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்
வீர்கள். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். புதிய பதவி, மனதில் உற்சாகம் பிறக்கும்.

மீனம்: நினைத்த காரியம் நிறைவேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பழைய வாகனத்தை விற்பனை செய்ய முயல்வீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

15 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்