இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். ஆன்மிகத்தில் மனம் செல்லும். மாலை முதல் எதிலும் நிதானம் தேவை. உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

ரிஷபம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் அமைதி நிலவும். பூர்வீக வீட்டை விற்பனை செய்ய திட்டமிடுவீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: பழைய நண்பர்கள் மூலம் உதவியுண்டு. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வீடு, வாகன செலவுகள் அதிகரிக்கும். வழக்குகள் இழுபறியாக இருக்கும்.

கடகம்: பிரபலங்களின் உதவியை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தினரின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் வரும். யாரிடமும் தேவையில்லாமல் பேச வேண்டாம்.

சிம்மம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். யாருக்கும் எந்த நேரத்திலும் உறுதிமொழி தர வேண்டாம்.

கன்னி: தடுமாற்றங்கள் நீங்கும். எடுத்த காரியங்களை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.

துலாம்: எதிர்காலத்தைப் பற்றிய பயம் வரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனியுங்கள். மாலை முதல் தொட்டது துலங்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: வீண் செலவு, அலைச்சல் வரும். அக்கம் - பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் வேண்டாம். பிள்ளைகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

தனுசு: எதிலும் வெற்றி பெறுவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வெளி மனிதர்களிடம் உங்கள் பிரச்சினையை கூற வேண்டாம்.

மகரம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய படிப்பில் சேர்க்கவும்.

கும்பம்: நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.வெளியூர் பயணத்தால் நன்மை ஏற்படும். பணவரவு உண்டு.

மீனம்: மனப் போராட்டம், ஒருவித பயம் இருக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. மாலை முதல் மகிழ்ச்சி தொடங்கும். நவீன மின்னணு பொருட்கள் வாங்குவீர்கள். தியானம் செய்யவும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

59 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

மேலும்