இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By Guest Author

மேஷம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

ரிஷபம்: ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது வேலை அமையும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர். பணவரவு உண்டு.

மிதுனம்: சேமிப்புகள் அதிகமாகும். குடும்பத்தில் உள்ள வீண் விவாதங்கள் விலகும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

கடகம்: வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். சொந்த - பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர் கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். அரசு காரியங்கள் விரைவாக முடியும்.

சிம்மம்: தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்பு வீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அடுத்தவர் மனசு காயப்படும்படி பேசாதீர். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

கன்னி: உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரை யும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். திட்டமிட்ட பயணம் நல்லபடியாக முடியும். வீண் விவாதம் தவிர்ப்பீர்.

துலாம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோ ஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். நண்பர்கள், உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.

விருச்சிகம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் உதவுவார்கள். பணவரவு உண்டு.

தனுசு: தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்: முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. குடும்பத் தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய்
முடியும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

கும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார் கள். வெளிவட்டாரத்தில் அனுகூலம் உண்டு. பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிது வாங்குவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 mins ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

22 hours ago

ஜோதிடம்

23 hours ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

மேலும்